மலைகள் முக்கியம் | பாரதி மேரி | VeritasTamil
மானுட வரலாற்றை உற்றுநோக்கினால், வெப்பமண்டல அல்லது குறைந்த வெப்பமண்டல பகுதிகளிலுள்ள சமூகங்களில் மலைகள் மைய புள்ளியாக இருந்து வந்ததை அறிந்து கொள்ளமுடிகிறது. மற்றவர்களுக்கு அவை அடைக்கலம் கொடுக்கக்கூடியதாக இருந்துவருகின்றன. பூமியிலுள்ள நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மலைகள் உள்ளன, கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மலைகளில் வாழ்வதோடு மட்டுமல்லாமல் விவசாயமும் செய்வதாக தரவுகள் சொல்கின்றன. அது மட்டுமல்ல, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும், ஆற்றலுக்காகவும் மலைகளைதான் நம்பியிருக்கின்றனர். மலைகளில் உருளை, காபி, ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அருகிவரக் கூடிய பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் மலைகள் உள்ளன.