உணவு கொடுக்கும் இறைவன் | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் இரக்கம் உடையவர். கடவுள் பக்தர். விருந்தோம்பும் குணம் கொண்டவர். ஒரு நாள் மாலை நேரம். கொட்டும் மழை, புயல்காற்று, மழையில் நனைந்தவாறு வீட்டு வாயிலில் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். பெரியவர் கதவைத் திறந்து, அவரை உள்ளே வரவேற்று நாற்காலியில் அமரவைத்து சூடான தேநீர் கொடுத்தார். அதன் பிறகு இரவு உணவைத் தயார் செய்யத் தொடங்கினார் பெரியவர்.

உணவு தயார் செய்தபின் வந்தவரிடம், ''ஐயா! என் மனைவி வாதநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வருடமாகப் படுக்கையில் செபம் செய்யப்போகிறேன். இந்த கிடக்கிறாள். அவளோடு சேர்ந்து செபம்தான் அவளுக்கு இரவு முழுவதும் நிம்மதியாகத் தூங்க வைக்கும் மருந்து. செபம் முடிந்தவுடன் நாங்கள் இருவரும் உணவு உண்போம்" என்று கூறிவிட்டு செபத்தை மனைவியுடன் தொடங்கினார். நீண்ட செபம், இருவரும் கண்ணீரோடு செபித்தார்கள்.

செபம் முடிந்தவுடன் வந்தவரிடம், "ершит, உணவை மேசையின் மீது வைத்துவிட்டு, உணவைக் கொடுத்த இந்த அருமையான கடவுளுக்கு நன்றி கூறி செபிப்போம்" என்றார் பெரியவர். உடனே, ''நான் ஒரு நாத்திகன். வேண்டுமானால் இந்த உணவை தயார் செய்த உங்களுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை. மேலும் உங்கள் மனைவி கடந்த ஒரு வருடமாக நோயினால் வேதனைப்படுகிறார். உங்கள் கடவுள் அவருக்கு சுகம் கொடுக்கவில்லை. எனவே, நான் கடவுளை நம்புவதில்லை" என்று கூறினார் நாத்திகர். அதுவரையிலும் அமைதி காத்த பெரியவர், கோபம் பொங்கியெழ, நாத்திகருக்கு உணவு கொடுக்காமல் வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். கடும் இருட்டு, விடாது மழை கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் காற்றில் பசியோடு வெளியில் உள்ள திண்ணையில் அமர்ந்தார் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு நாத்திகர்

அந்த இரவில் பெரியவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது கடவுள் அவருக்குத் தோன்றினார். "இன்று உன் வீட்டிற்கு வந்தவருக்கு, நீ ஏன் உணவு கொடுக்கவில்லை? குளிரில் பசியோடு இருக்கிறார். அவர் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவரும் என் மகன் தானே. இத்தனை ஆண்டுகளாக நான் உனக்கும் அவருக்கும் உணவு கொடுத்து காத்து வந்திருக்கிறேன். நீ அவருக்கு ஒருவேளை உணவு கூட கொடுக்கவில்லை. உன் இதயத்தில் இரக்கம் இல்லையா?" என்ற கடவுளின் குரல், பெரியவர் மனதில் ஒலித்தது.

படுக்கையை விட்டு உடனே எழுந்த பெரியவர், வெளிக்கதவைத் திறந்தார். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த நாத்திகரை வீட்டுக்கு உள்ளே அழைத்து வந்தார். நடுஇரவில் உணவு தயார் செய்து, விருந்தினர் முன் வைத்து விட்டு, "ஐயா, நான் வழிபடும் கடவுள், நான் தூங்கும்போது என்னை எழுப்பி, இந்த உணவை உங்களுக்குக் கொடுக்குமாறு கட்டளையிட்டார். காரணம், நீங்களும் அந்த கடவுளின் மகன்" என்றார்.

''இந்த அற்புதமான உணவை, இந்த இரவில் தயார் செய்து கொடுத்த உங்களுக்கும், நீங்கள் வழிபடும் கடவுளுக்கும் நன்றி" என்று கூறிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் நாத்திகர்.

"நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்." மத். 25:35,40.

நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்தவிடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார். (   நீமொ 10:3)

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image