சுட்டிப் பையன்... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

பெற்றோருக்கு அவன் ஒரே செல்லமாக பையன். மிகவும் பற்றோருக்கு வளர்க்கப்பட்டான். தொலைக்காட்சிப் பெட்டிக்குமுன் அமர்ந்து படம் பார்ப்பதுதான் அவனது வேலை. சுட்டி T. V. நிகழ்வுகளை அவன் விரும்பிப் யார்ப்பான். பல சமயங்களில் சாப்பிடக்கூட மறந்து விடுவான்.

பார்க்கையில் ஒருநாள், சிறுவனின் தாய் அவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றாள். திரும்பி வந்து அதிர்ச்சியடைந்தாள். வீட்டிலுள்ள பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த நகை, பணம் திருட்டுப் போயிருந்தது. ஆனால் வீட்டிலிருந்த மகன் தொலைக்காட்சிப் பெட்டி நிகழ்ச்சிகளில் மூழ்கிக் கிடந்தான். கோபம் கொண்ட அவனுடைய பெற்றோர்கள் தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டிலிருந்து அகற்றிவிட்டனர்.

அன்று முதல் சிறுவன் அடம் பிடிக்க ஆரம்பித்தான். சுட்டித்தனம் செய்யத் தொடங்கினான். பெற்றோர் சொல் கேட்பதில்லை, பள்ளிக்கூடம் செல்வதில்லை.பெற்றோருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இறுதியாக அச்சிறுவனை ஒரு முனிவரிடம் அழைத்துச் சென்று தங்களுடைய பிரச்சனைகளைக் கூறினார்கள். முனிவர் அந்தச் சுட்டிப்பையனை அன்போடும், பாசத்தோடும் உற்று நோக்கினார். முனிவர் சிறுவனைத் தன் தோட்டத்தில் விளையாடச் சொல்லிவிட்டு பெற்றோருக்குக் கதை ஒன்று கூறினார். பெரிய காடு. அதில் எல்லா வகையான மிருகங்களும், பறவைகளும் கூடி வாழ்ந்து வந்தன. சிங்கம் அவர்களுக்கு ராஜாவாக இருந்தது. சிங்கராஜாவின் ஆட்சிக்காலம் பொற்காலமாக இருந்தது.

ஒருநாள் ஒரு யானைக் குட்டியின் பெற்றோர் தங்கள் மகனுடன் சிங்கராஜாவிடம் வந்தார்கள். 'ராஜாவே! இவன் எங்கள் மகன். எங்களை மதிப்பதில்லை. நிறைய குறும்புத்தனம் செய்கிறான். இன்று காலையில் சிறுவன் ஒருவனை அடித்துக் காயப்படுத்திவிட்டான். நீங்கள் தான் இவனுக்குத் தண்டனை கொடுத்துத் திருத்த வேண்டும்' என்று கெஞ்சிக் கேட்டனர். சிங்க ராஜா உடனே தன் மந்திரி சபையைக் கூட்டினார். சுட்டி யானைக் குட்டியை நடுவில் நிறுத்தி, அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்ற விவாதத்தைத் தொடங்கினார். குள்ள நரி,'இவனை நாடு கடத்த வேண்டும். நமது காட்டை விட்டு வெளியே விரட்ட வேண்டும்' என்று கூறியது. கழுதை, "இவன் தலையில் பெரிய சுமையை வைத்து காட்டைச் சுற்றிவரச் செய்ய வேண்டும்' என்றது. கரடி, "மூன்று நாள் உணவில்லாமல் பட்டினி போட வேண்டும்' என்றது. ஆனால் யானைக்குட்டியின் பெற்றோர், 'ராஜாவே! நீங்களே அவனுக்குத் தண்டனை கொடுங்கள்' என்றனர்.

சிங்கராஜா உடனே யானைக் குட்டியிடம் 'நான் ஆறுமாத காலம் வெளிநாடு செல்கிறேன். நான் வரும்வரை நீ தான் இந்தக் காட்டுக்கு ராஜா. அன்று முதல் யானைக் குட்டி எல்லாவகைச் சுட்டித்தனத்தையும் விட்டுவிட்டு எல்லோரும் பாராட்டும் விதமாக நல்லாட்சி நடத்தியது.

"மண்ணிலே பிறக்கும் எந்தக் குழந்தையும் சுட்டிக் குழந்தையாகப் பிறப்பதில்லை. அது சுட்டிக் குழந்தையாக மாறுவது அதன் தாய் தந்தையின் வளர்ப்பினிலே " என்று அறிஞர் கூறுவர்.

ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்; மெய்யறிவைப் பேணிக் காப்பவர் நன்மை அடைவார். ( நீமொ 19:8)


எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image