விவேகமுள்ள இளைஞன்... | அருள்பணி. முனைவர் A .அந்தோணிசுவாமி | Veritas Tamil

விவேகமுள்ள இளைஞன்...

மிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. கபடித்த இளைஞர்கள் வேலைதேடி அலைகிறார்கள். வேலைக்காக 'நேர்முகத் தேர்வு' (Interview) எங்கு நடந்தாலும் தவறாமல் பங்கெடுப்பர். ஆனால் வேலைதான் எட்டாக் கனியாக இருக்கிறது.

ஒருநாள், பத்திரிக்கை ஒன்றில் "வேலைக்கு ஆட்கள் தேவை. நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது" என்ற விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த இளைஞன் ஒருவன், அதிகாலையில் எழுந்து, விளம்பரம் கொடுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றான். அங்கு இளைஞர்கள் பலர் வேலைதேடி வந்திருந்தனர். நேர்முகத் தேர்வு நேரம் வந்தது. ஆனால் நேர்முகத் தேர்வு நடத்துகிற அதிகாரிகள் வந்து சேரவில்லை. அவர்கள் வந்து சேர இன்னும் ஒருமணி நேரம் காலதாமதம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அது மிகப்பெரிய தொழில் நிறுவனமாக இருந்ததால், வந்திருந்த அனைவருக்கும் காலை உணவு கொடுக்கப்பட்டது. உணவு உண்டபின் நேர்முகத் தேர்வு தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்றனர். அவர்களிடம் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டன. படிப்பு தொடர்பாகவோ, வேலை தொடர்பாகவோ இல்லாத தேவையற்ற கேள்விகள்.

முதல் கேள்வி: இன்று காலையில் கொடுக்கப்பட்ட உணவு எப்படியிருந்தது?

இரண்டாவது கேள்வி: உங்கள் கிராமத்தில் எத்தனை காகங்கள் உள்ளன?

முதல் கேள்விக்கு ஒருவரைத்தவிர எல்லோரும் காலை உணவு நன்றாக இருந்தது என்றும் இரண்டாவது கேள்விக்கு பதில் தெரியாது என்றும் கூறினர். ஆனால் அந்த இளைஞன் மட்டும் ''காலை உணவை நான் உண்ணவில்லை. காரணம், நான் உணவுக்காக வரவில்லை. வேலை தேடி வந்திருக்கிறேன்" என்றான். "மேலும் நான் தினமும் அதிகாலையில் காகங்கள் 'கா கா கா' எனக் கரையும் முன் எழுந்து விடுவேன். காலைக் கடன்களை முடித்தபின், கிராமத்தைச் சுற்றி வருவேன்.அப்பொழுது எங்கள் கிராமத்திலுள்ள காகங்களைப் பார்த்த பொழுது 355 காகங்கள் இருந்தன" என்று கூறி முடித்தான்.

"நீ எப்படி அவ்வளவு துல்லியமாகக் கூறுகிறாய்?" என்று நேர்முகத் தேர்வு அதிகாரிகள் அவனிடம் கேட்டனர். அதற்கு அவ்விளைஞன், 'உங்களுக்கு சந்தேகமிருந்தால் யாரையாவது அனுப்பி, மீண்டும் எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். எண்ணிக்கையில் அப்படி ஏதாவது குறைந்திருந்தால், சில காகங்கள் உணவைத் தேடி வெளி இடங்களுக்குச் சென்றிருக்கலாம் அல்லது அதிகமாயிருந்தால் சில காகங்கள் விருந்தினராக அக்கிராமத்துக்கு வந்திருக்கலாம்" என்று கூறினான்.

விவேகமான பதிலைக் கேட்டவுடன் அவனுக்கு வேலைகிடைத்தது. இளைஞனின்

'விவேகமும், தியாகமும் வாழ்க்கையில் வெற்றியைத் தரும்.'

விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும். ( 10:13)

 

Tamil Survey Popup Image