​​​​​​​டிஜிட்டல் உலகில் கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் செல்லுங்கள்: கர்தினால் ஃபிலிப்பே நேரி ஃபெர்ராவ் | Veritas Tamil

டிஜிட்டல் உலகில் கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் செல்லுங்கள்: கர்தினால் ஃபிலிப்பே நேரி ஃபெர்ராவ்

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவர் கர்தினால் ஃபிலிப்பே நேரி ஃபெர்ராவ் அவர்கள், கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், இயேசு கிறிஸ்துவின் அன்பை டிஜிட்டல் உலகிற்கு எடுத்துச் செல்வதுடன், சமூக ஊடகத் தளங்களைப் புகழையும் பிரபலத்தையும் தேடுவதற்குப் பதிலாக, திருஅவையின் ஒன்றிப்பை வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பர் 11ஆம் தேதி, ஆசியாவின் முதல் கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையில் பங்கேற்றவர்களுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில் கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள், “பின்தொடர்பவர்கள், விருப்பங்கள் அல்லது அதிகமான தெரிவுநிலையைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், கிறிஸ்துவை அறிவிக்கவும், பிறருக்குச் சேவை செய்யவும், ஒன்றிப்பின் பாலங்களை உருவாக்கவும் உங்களுக்குக் கிடைக்கும் தளங்களைப் பயன்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கியூசான் நகரில் அமைந்துள்ள ரேடியோ வேரித்தாஸ் ஆசியா (RVA) தலைமையகத்தின் புனித இரண்டாம் ஜான் பால் அரங்கில், பிற்பகல் அமர்வு தொடங்குவதற்கு முன்பு, ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க டிஜிட்டல் தொடர்பாளர்கள் மற்றும் மறைப்பணியாளர்களிடம் அவர் உரையாற்றினார்.

செப்டம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இப்பேரவையை, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத் தொடர்பு அலுவலகம் (FABC-OSC) மற்றும் ரேடியோ வேரித்தாஸ் ஆசியா ஆகியவை, திருப்பீடத் தகவல் தொடர்பு பேரவையின் Fully Present Network உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. “செல்வாக்கு செலுத்துபவர்களிலிருந்து சாட்சிகளாக: ஆசியாவில் டிஜிட்டல் மறைப்பணிக்கான ஒன்றிணைந்த பாதை ” என்பது இப்பேரவையின் மையக்கருத்தாகும்.

வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மேய்ப்புப்பணி சூழல்களிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரே பொதுவான பணியால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள், “இயேசு கிறிஸ்துவின் அன்பை டிஜிட்டல் உலகிற்கு எடுத்துச் செல்வதும், மக்கள் வாழும், தொடர்புகொள்ளும், வாழ்வின் பொருளைத் தேடும், கேள்விகளை எழுப்பும் இடங்களில் திருஅவையை உடனிருக்கச் செய்வதுமே” அந்தப் பணி என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் தளங்கள், மக்கள் உறவுகளை உருவாக்கும், வாழ்வின் பொருளைத் தேடும், வாழ்க்கையின் ஆழமான கேள்விகளை எதிர்கொள்ளும் புதிய மறைப்பணித் தளமாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதனால்தான், டிஜிட்டல் மறைப்பணியாளர் சீடர்களாகிய உங்கள் அழைப்பு மிகவும் முக்கியமானது” என்று கூறிய அவர், டிஜிட்டல் மறைப்பணியில் படைப்பாற்றல், துணிவு மற்றும் உடனிருப்பை வெளிப்படுத்துமாறு பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.

செல்வாக்கு செலுத்துபவர்களாக இருப்பதிலிருந்து சாட்சிகளாக மாறுவதே இப்பேரவையின் மைய நோக்கம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள், “ஒரு செல்வாக்கு செலுத்துபவர் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், ஒரு சாட்சி அதைவிட ஆழமான ஒன்றைச் செய்கிறார். ஒரு சாட்சி தன்னைக் கடந்து கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறார்” என்று கூறினார்.

டிஜிட்டல் சாட்சி என்பது வெறுமனே வார்த்தைகளையோ சமய உள்ளடக்கங்களையோ பகிர்வது மட்டுமல்ல என்று கூறிய அவர், நற்செய்தி டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் எவ்வாறு பேசுகிறார்கள், கேட்கிறார்கள், பதிலளிக்கிறார்கள், பிறருடன் உடனிருந்து அவர்களை வழிநடத்துகிறார்கள் என்பவற்றை வடிவமைக்கும் வகையில், உண்மையான கிறிஸ்தவ வாழ்வை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தப் பணியை ஆசியத் திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்துடன் அவர் இணைத்துப் பேசினார். “ஒன்றிணைந்த பயணம் என்பது நாம் ஒன்றாகப் பயணிக்க அழைக்கிறது” என்று கூறிய அவர், டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் “பேசுவதற்கு முன் கேட்கவும், தீர்ப்பிடுவதற்கு முன் புரிந்துகொள்ளவும், அறிவுரை வழங்குவதற்கு முன் உடனிருக்கவும், போட்டியிடுவதற்குப் பதிலாக ஒத்துழைக்கவும்” வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக இளைஞர்கள், வாழ்வின் பொருளைத் தேடுபவர்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திலிருந்து விலகியிருப்பதாக உணருபவர்கள் தாங்கள் கேட்கப்படுகிறோம், வரவேற்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்று உணரும் இடங்களாக டிஜிட்டல் தளங்களை உருவாக்க வேண்டும் என்றும் கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் உலகிற்குள் நுழைவதற்கு அஞ்ச வேண்டாம் என்றும், “கிறிஸ்துவின் இதயத்துடன்” அதற்குள் நுழைய வேண்டும் என்றும் அவர் டிஜிட்டல் மறைப்பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

“நற்செய்தியில் வேரூன்றியவர்களாகப் படைப்பாற்றலுடன் செயல்படுங்கள். பணிவுடன் துணிச்சலுடன் செயல்படுங்கள். உடனிருங்கள்; ஆனால், எப்போதும் உங்களைக் கடந்து இயேசுவைச் சுட்டிக்காட்டுங்கள்” என்று அவர் கூறினார்.

ஆசியா முழுவதும் டிஜிட்டல் மறைப்பணியாளர்களிடையே ஒன்றிப்பை வலுப்படுத்தவும், புதிய ஒத்துழைப்பு வழிகளை உருவாக்கவும் இப்பேரவை உதவும் என்று நம்புவதாகவும் கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள் தெரிவித்தார்.

“இந்தப் பேரவை உங்களிடையே உள்ள ஒன்றிப்பை வலுப்படுத்தவும், உங்கள் மறைப்பணிக்கான அழைப்பை ஆழப்படுத்தவும், ஆசியத் திருஅவை முழுவதும் புதிய ஒத்துழைப்பு வழிகளுக்கு ஊக்கமளிக்கவும் வேண்டுகிறேன்” என்று அவர் கூறினார்.

இறுதியாக, இப்பேரவையை இறைவனிடம் ஒப்படைத்த அவர், ஆசியத் திருஅவையின் மறைப்பணிக்காக இப்பேரவை “உயிரோட்டமான பலன்களைத் தர வேண்டும்” என்று இறைவனை வேண்டிக்கொண்டார்.

ஆசியாவின் முதல் கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவை, ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க டிஜிட்டல் தொடர்பாளர்களை ஒன்றிணைத்து, டிஜிட்டல் நற்செய்திப் பணி, ஒன்றிணைந்த பயணம் மற்றும் உண்மையான கிறிஸ்தவச் சாட்சி குறித்து நான்கு நாள்கள் பயிற்சி, சிந்தனை மற்றும் அனுபவப் பகிர்வை வழங்குகிறது. இப்பேரவை செப்டம்பர் 13ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் கியூசான் நகரில் நடைபெறுகிறது.

Tamil Survey Popup Image