“விலகும் விழிகள் விழிக்கும் விழிகள்” நூல் வொளியீடு | Veritas Tamil

வேலூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி டேனியல் ஷார்மா அவர்கள் எழுதிய “விலகும் விழிகள் விழிக்கும் விழிகள்” என்னும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் POCSO விழிப்புணர்வு குறித்த மேய்ப்புப்பணி மற்றும் கல்வி வழிகாட்டி நூலை அடைவு பதிப்பகம், அதேகாம் (Athaegom) அமைப்புடன் இணைந்து வெளியிட்டுஉள்ளர்.

Book

இந்தப் புத்தக வெளியிட்டு விழாவில் அருள்பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக்கியமான ஒரு வழிகாட்டியாக கருதப்படுகிறது. இது குழந்தைகளின் பாதுகாப்பு, துன்புறுத்தலைத் தடுப்பது, மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையும் இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட மதிப்புள்ள உறவுகளை வளர்த்தல் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு நிறைந்த சூழலை உருவாக்குவதற்கான நடைமுறை வழிகாட்டுதலையும் இந்நூல் வழங்குகிறது, இதன் மூலம் நம் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும் மதிப்புடனும் வளரக்கூடிய சூழல் உறுதி செய்யப்படுகிறது.

மேலும் அருள்பணி டேனியல் ஷார்மா கூறுகையில் குழந்தைகள் பாதுகாப்புப் பணி முன்னேற்றம் பெற அருளும் வழிகாட்டுதலும் வழங்கி தொடர்ந்து ஊக்கப்படுத்திய வேலூர் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு P. அம்புரோஸ் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி தெரிவித்தார்.

மேலும் வேலூர் மறைமாவட்டத்தின் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் அவர்களின் சகோதரத்துவ ஆதரவிற்கு நன்றி கூறி, தம் ஆன்மிக மற்றும் கல்வி பணிகளுக்கான சிறிய பங்களிப்பாக இந்நூலை அவர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.மற்றும் அனைத்து அருள்பணியாளர்கள், துறவிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்நூலை தங்களது ஆன்மிக மற்றும் கல்வி திட்டங்களில் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறார். “உங்கள் ஆதரவு, இந்த பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணி மேலும் பல ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு சென்றடைய உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த முயற்சி நம் குழந்தைகளின் வாழ்வில் பலன்களைக் கொண்டு வரவும், அவர்களை கிறிஸ்துவின் ஒளியில் காக்கவும், கல்வி அளிக்கவும், வலுவூட்டவும் நம் ஒற்றுமையான உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும் துணை புரியும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.