தகுதி உள்ளவனே தலைவன் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.04.2025

தலையெல்லாம் தலையல்ல,
தகுதியுள்ளது மட்டுமே தலை எனப்படும்.
உறுதியான இருதயம்
தகுதியான தலை
உழைக்கும் கை
தோல்வியேது?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்றான்.
நிச்சயம்,
எஃகினால் செய்த இருதயம் வேண்டும்
நீ எத்தனை முறை விழுந்தாய் என்பது அல்ல,
நீ எத்தனை முறை எழுந்தாய் என்பது கணக்கில் வைக்கப்படும்.
அடுத்தது,
அந்த இதயத்தை வழி நடத்தும் தலை,
தலையெல்லாம் தலையல்ல,
தகுதியுள்ளது மட்டுமே தலை எனப்படும்.
அந்தத் தகுதி என்பது என்ன?
அது அறிவு
ஒன்று படிப்பறிவு
ஒன்று பட்டறிவு
மற்றது கேள்வியறிவு
பிறர் சொன்னதை படித்தோ,கேட்டோ
அல்லது தானே அனுபவித்தோ,
பட்டோ வரும்அறிவினால் வரும் தகுதி என்பது
தலை.
மூன்றாவது சோம்பல் எனும் நோயை வென்ற
ஓயாது உழைக்கும்கைகள்.
இந்த மூன்று கூட்டணியும் அமைந்த உயிர் அபூர்வமானது
ஆனால் அமைந்துவிட்டால் தோல்வியேது.
வாழ்வோம் வாழ்வை வாஞ்சையுடன்
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு நேர்மையும் உழைப்பும் விடாமுயற்சியும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
