பொறாமை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.01.2025
தன்னம்பிக்கையின் எதிரி யார்?
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொறாமை என்னும் சாத்தானை மனதிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது.
'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி.
இந்தப் பழமொழியில் ஆமை(tortoise) என்றால் 'ஆமை' என்ற பிராணியைக் குறிப்பதல்ல.
மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான்.
'பொறாமை' என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்து விடுகிறது.
பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் 100 பேரும், தங்களது சாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை.
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய அளவீடை (Self Estimation) உடலாலும், பதவியாலும், செல்வத்தாலும் கொண்டுள்ளார்கள்.
தனது அளவீட்டை வைத்து அடுத்தவர்களின் முன்னேற்றத்தை அளக்கிறான். பின்பு ஒப்பிடுகிறான். பின்பு தன்னுடைய வெற்றியின் அளவு குறையும் போது, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை அடைகிறான்.
தன்னம்பிக்கையின் எதிரியே இந்த பொறாமைதான்(Jealousy).
பொறாமை குணம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் தன்னம்பிக்கை இருக்காது.
பொறாமை என்னும் கண்ணாடி அணிந்துகொண்டால் உலகில் எல்லாமே உங்களுக்கு வெறுப்பாகவும்,
உங்களை அனைவரும் ஒதுக்கிவிட்டதாகவுமே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள்.
ஆகையால்,பொறாமையைப் புறக்கணியுங்கள், பொறாமையை விலக்கிவிடுங்கள்.
இல்லையெனில் நமது முயற்சி, இலட்சியம்(aim), உழைப்பு(hard work) அனைத்தையும் திசைமாறச் செய்துவிடும். அதலபாதாளத்தில் அது நம்மைத் தள்ளிவிடும்.
பொறாமையையும், சுயசிந்தனையும் ஒழுங்குபடுத்திக்கொண்டால் நாமும் ஒரு வெற்றியாளர்தான்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளர்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி