வாழ்க்கையின் வசந்தம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.11.2024

“வாழ்க்கை பயணத்தில் முடிவுகள் என்று எதுவும் இல்லை
வளைவுகள் மட்டுமே இருக்கின்றன.
பல நேரங்களில் தோல்வியின் விளிம்பிலோ,
அல்லது பின்னடைவுகளின் போதோ,
உறவுகளின் இழப்பின் போதோ வாழ்க்கைப் பாதையானது முடிவுக்கு வந்துவிட்டது போல் நினைக்கிறோம்.
ஆனால், அது நம் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை என்பதை நாம் பதட்டத்தில் மறந்தே விடுகிறோம்.
அந்த வளைவுகளில் பயணித்து வெற்றி கண்டால் தான்
வாழ்க்கை என்ற அனுபவ பாடத்தில் தேர்ச்சி பெற்று வெற்றி வாகை சூட முடியும்
வளைவுகளின் வசந்தத்தில்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
