இது உன் வாழ்க்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.05.2024

                                                      இது உன் வாழ்க்கை
 

ஊர் பார்க்கிறது, ஊர் என்ன சொல்லுமோ, பிறர் என்ன நினைப்பார்களோ என்று
 எண்ணி எண்ணி அடுத்தவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ நீங்கள் வாழ்வது அடுத்தவர்
வாழ்க்கை இல்லை.

பிறர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி பயந்து வாழ நீங்கள் வாழ்வது பிறரின் வாழ்க்கை இல்லை.

இது உங்களது வாழ்க்கை. அது உங்களுக்குப் பிடித்த மாதிரி தான் இருக்க வேண்டும்.

உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்.

இறைவன் நமக்குத் தந்த பிரமாண்டமான பரிசு தான் இந்த வாழ்க்கை.

இதை ஒவ்வொரு நிமிடமும் அன்போடும் .
புன்னகையோடும் வாழ்ந்தல் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி