குழந்தைத் தன்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.07.2024

குழந்தைகளிடம் இருந்து நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

அவர்களுக்கு நினைவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எப்போதும் இருப்பதில்லை. 

நேற்று ஏற்பட்ட வலியை நினைத்து அழுவதோ, 

நாளைய பற்றி நினைவுகளோ அவர்களை பாதிப்பதில்லை. 

எப்போதும் கண்முன் நடந்து கொண்டிருக்கும் நிகழ் காலத்தில் மட்டுமே அவர்கள் பயணிக்கிறார்கள். 

நிகழ் காலத்தில் இருப்பதால் அபாரமான சக்தியும் விழிப்புணர்வும், ஆர்வமும் இருக்கின்றன. 

நிகழ்காலத்தில் வாழ்க் கற்றுக் கொள்ளும்போது தான் மனிதனால் மன நிறைவாக வாழமுடியும்

 குழந்தைத் தனத்திற்கும், குழந்ததை தன்மைக்கு வேறுபாடு உள்ளது

குழந்தைத் தனம் என்பது எதையும் யோசிக்காமல் செய்வது

பயமின்றி செயல்படுவது

குழந்தை தன்மை என்பது மனம் எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது

பெரியவர்கள் குழந்தைத் தனத்தில் செயல்படும் போது விளைவு வினையாகும் நிலை ஏற்படும்

ஆனால், குழந்தைத் தன்மையோடு செயல்படும் போது விளைவு நல் விளைவாக மட்டுமே விளையும் 

முயற்சித்துப் பார்த்து அனுபவம் பெற்றால் மட்டுமே இதன் விளக்கம் புரியும்  

 குழந்தைத் தன்மையில்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி