பெரியவரும் டிக்கெட்டும் | January 25 | VeritasTamil

இரயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன.வெளியில் இரயில் நிலையத்தில் டிக்கெட் மிஷினில் டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் சரியாக இரயிலை பிடித்துவிடலாமா? கடினம்தான். என்றாலும் கால்களின் நடைவேகம் குறையவில்லை. ஏனெனில் அடுத்த இரயில் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து மதியம் இரண்டு மணிக்கு தான். ஏற்கனவே அதிகபசி. இந்த இரயிலைப் பிடித்தாலே வீடு போய்ச்சேர மதினம் இரண்டு மணி ஆகிவிடும். காலின் வேகத்தோடு மனதின் வேகமும் இன்விப்போனது. ஆனால் அச்சிறிய இரயில் நிலைய வாசலுக்குள் நுழைந்தவுடனே என் வேகம் குறைந்து போனது. டிக்கெட் மிஷன் இன் வரிசையில் ஐந்து  பேர் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் டிக்கெட் எடுத்த பின்புதான் நான் டிக்கெட் எடுக்க முடியும். அரை நம்பிக்கையுடன் வரிசையில் போய் சேர்ந்து கொண்டேன்.

புது நம்பிக்கையூட்டுவதாக வரிசையில் நின்ற நான்கு பேர் மொத்தமாக விலகிபோனார்கள். காரணம், அவர்களில் முதலில் நின்றவர் மீதியிருந்த மூவருக்கும் சேர்ந்து டிக்கெட் எடுத்து விட்டார். எனவே அவர்களும்  இரயில் ஏற நடைமேடை நோக்கி நடந்தனர். இப்போது, என்னில் பரபரப்பு பற்றிக் கொண்டது. ஒரே நபர்தான், அவர் முடிந்துவிட்டால், நான் டிக்கெட் எடுத்து விடுவேன், இரயிலயும் பிடித்துவிடுவேன். ஆர்வமாய் கையில் சில்லறைகளோடு காத்திருக்கையில் எனக்கு முன் நின்றவர் முடித்த பாடில்லை. காரணம், அவர் டிக்கெட் எடுக்க செலுத்தியபோது பண நோட்டை மிஷின் ஏற்கவில்லை. மூன்று முறை முயர்ச்சி செய்தும், அனுப்பிய நோட்டு திரும்பி வருகிறது. அவரும் விடுவதாய் இல்லை. ஐயோ! இந்த நேரத்தில் இப்படி செய்கிறாரே ரூபாய் நோட்டு சரி வரலைனா வேறு நோட்டோ சில்லறையோ போட்டு டிக்கெட் எடுக்க வேண்டியதானே! அப்படியில்லைன்னா பின்னால் நிக்கிற எனக்காவது விட்டிபடு போக வேண்டியதானே! என நான் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்த போது என் பின்புறத்திலிருந்து ஒரு குரல் "இதோ. இதை போடு ஒரு எழுபது வயது மதிக்கதல்க ஒரு முதியவர் கையில்  சில்லறையோடு என்னை முந்தி கொண்டு சென்றார். அவர் கொடுத்ததை வாங்கிய நபரும் அதை போட்டு டிக்கெட்  மிஷினில் போட அந்த முதியவரே டிக்கெட்டுக்குரிய பட்டனையும் அழுத்தி விட்டார். இதற்கிடையில் பெரியவர் கொடுத்த பணத்திற்கு பணமாற்றம் நடந்தது. டிக்கெட் வெளியே வந்த பிறகும், கொடுத்த பல கோட்டு மீதி சில்லறையை பெரியவரிடம்  'கொடு கொடு' என வேகமாக வாங்கிக் கொண்டு, நடைமேடையை நோக்கி வேகமாக நடந்தார் அந்த நபர்.

இதையெல்லாம் அரை மனதோடு கவனித்துக் கொண்டிருந்த நிலையில், நான் செல்ல வேண்டிய ரயில் வருவதன் சப்தம் கேட்டது. வெளியே வர இரயில் நடைமேடையில் இரு நிமிடம் தான் நிற்கும். அதற்குள் செல்ல வேண்டும். ஆனால், இந்த பெரியவர் மிஷின் அருகில் சென்றுவிட்டாரே, என்ன செய்வது? ஆனால் அந்த பெரியவர் என் பக்கம் திரும்பினார்,"இந்த இரயிலுக்கா போகனும் ? என்று கேட்டார். "ஆமாம்" மிக வேகமாக சொன்னேன். நீ நடைமேடைக்கு போ, நான் உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டு வறேன்; என்றார். யாரேண்றே தெரியாத நபர். ஆனால் ஒரு சில மணித்துளிகளில் முடிவு செய்ய வேண்டும். சரி  என்று சொல்லிக்கொண்டு இரயிலை நோக்கி ஓடினேன். இரயிலின் கதவு மூடாதவாறு உட்புறமும் வெளிபுறமாக கால்களை வைத்து நின்று, அந்த பெரியவரை எதிர்பார்த்து நின்றேன். டிக்கெட் இல்லாமல், இரயில் புறப்பட்டாலும் நானும் பயணம் செய்ய முடியாது. "வருவாரா? நானாகவே டிக்கெட் எடுத்துகொண்டுவந்து ரயில் ஏறியிருக்கலாமோ!- என்று யோசிப்பதற்குள் அந்த பெரியவர் வந்துவிட்டார். அவர் இரயிலுக்குள் ஏறுவதற்கும் மொத்தமாக இரயிலின் எல்லா பெட்டிகளும் மூடுவதற்கும் சரியாக இருந்தது.

இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. எங்களின் பரபரப்பு பதைபதைப்பும் மெதுவாக குறைந்தது. இரண்டாக இருந்த டிக்கெட்டுகளில் ஒன்ரை கிழித்து அவர் என்னிடம் தந்தார். வாங்கி கொண்டு சரியான  சில்லறையை எண்ணி அவரிடம் நீட்டினேன். புன்முறுவலோடு என்னைய் பார்த்த அவர், என் முதுகில் தட்டி "mi hai fidato, Vai" - "என்னை நம்பினாயே (அது போதும்) ! போ!" என்று சொல்லிவிட்டு சற்று நிற்காமல் வேகமாய் நடந்துபோய் நான்கு இருக்கைகள் தாண்டிபோய் அமர்ந்து கொண்டார். அவ்வப்போது தூரத்திலிருந்தே ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டோம். அவர் எங்கே இறங்க போகிறார் என்பது கூட தெரியவில்லை. நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. ரயிலிலிருந்து இறங்கும் போது மீண்டும் ஒருமுறை புன்முறுவலோடு இருவரும் பார்த்துக் கொண்டோம். விடைபெற்றோம். 

இது உரோம் அருகில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் நடந்தது.மிஷினில் டிக்கெட் எடுக்க தடுமாறி, பெரியவரின் உதவிபெற்ற அந்த நபரும், அந்த பெரியவரும், நானும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி.