புத்த மத அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய கத்தோலிக்க ஆயர்!| Veritas Tamil

2025 டிசம்பர் 16 அன்று, கம்போடியாவின் பினோம் பெனில் அமைந்துள்ள வாட் ஓனாலோம் நிதிக்கு (Wat Ounalom Fund) கத்தோலிக்க ஆயர் ஒலிவியர் ஷ்மித்‌தாஹுஸ்லர், பினோம் பென் அப்போஸ்தலிக் விக்கார், அமெரிக்க டாலர் 2,000 நன்கொடை வழங்கினார்.

மனிதநேய உணர்வும் தேசிய ஒற்றுமையும் கொண்ட மனப்பாங்கில் வழங்கப்பட்ட இந்த நன்கொடை, கம்போடியா–தாய்லாந்து எல்லைப் பகுதியில் நீடித்து வரும் மோதலால் கடுமையான துன்பங்களை எதிர்கொள்ளும் கம்போடியா அகதிகளுக்காக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

இந்த நன்கொடை, பிரேயா சிஹனுக் ராஜா புத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், வாட் ஓனாலோம் மடத்தின் தலைமை அபாடுமான மிக வணக்கத்திற்குரிய சம்தெச் பிரேயா மஹா ஆரேயவொங் டாக்டர் யோன் செங் யீத் அவர்களிடம் முறையாக வழங்கப்பட்டது. இடம்பெயர்ந்த சமூகங்களின் மிக அவசர தேவைகளை நிறைவேற்ற, இந்த நிதி விநியோகத்தை அவர் மேற்பார்வை செய்வார்.

இந்த அறப்பணித் தானம், 2025 டிசம்பர் 15 அன்று வாட் ஓனாலோமில், ஆயர் ஒலிவியர் மற்றும் மிக வணக்கத்திற்குரிய சம்தெச் பிரேயா மஹா ஆரேயவொங் டாக்டர் யோன் செங் யீத் ஆகியோருக்கிடையே நடைபெற்ற அமைதி குறித்த அதிகாரப்பூர்வ கலந்துரையாடலுக்குப் பின்னர் வழங்கப்பட்டது. இது, நெருக்கடியான காலங்களில் மதங்களுக்கிடையேயான உரையாடலும் ஒத்துழைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதைக் கொட்டிக் காட்டியது.

இந்த கடினமான சூழ்நிலையில், ஆயர் ஒலிவியர் தொடர்ந்து பல மனிதாபிமான முயற்சிகள் மூலம் தன்னுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகிறார். அவற்றில் சில:

சீம் ரீப் மாகாணத்தில் உள்ள மிக வணக்கத்திற்குரிய சம்தெச் பிரேயா ப்ரோம் ரத்தனமோனி பின் செம் சிரிசுவன்னோ அவர்களுக்கு அமெரிக்க டாலர் 2,000 நன்கொடை;

வழிபாடு மற்றும் மத விவகார அமைச்சகத்திற்கு அமெரிக்க டாலர் 1,500;தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மேம்பாட்டுத் துறைக்கு ஆறு மில்லியன் ரியல்;மேலும் பல பொதுநிவாரண நிதிகளுக்கும் கூடுதல் பங்களிப்புகள்.சமீபத்திய உபதேசங்களில், ஆயர் ஒலிவியர் கத்தோலிக்கர்களை இரண்டு அடிப்படைத் தூண்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்:
ஒற்றுமை — சக குடிமக்களுடன் ஒன்றிணைந்து, குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் மிகப் பாதிப்புக்குள்ளான அகதிகளுக்கு ஆதரவாக நிற்பது;
ஜெபம் — உடனடி அமைதிக்காக வேண்டவும், “ஆயுதங்களின் ஒலியை மவுனமாக்கவும்” ஜெபத்தின் வல்லமையை நம்புவது.

இந்த தருணத்தின் அவசரத்தைக் குறிப்பிட்ட அவர்,
“கத்தோலிக்கர்களாகிய நமக்கு ஒரு சிறப்பு வல்லமை உள்ளது: ஜெபம். அமைதி நாளை அல்ல, இன்றே வர வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறோம்” என்று கூறினார்.

கம்போடியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, டிசம்பர் 7 அன்று மீண்டும் தீவிரமடைந்த எல்லை மோதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக, பலர் காயமடைந்ததாகவும், கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பேர் இடம்பெயர்ந்து, தங்குமிடம் மற்றும் உணவு பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக ,இந்த அதிகரிக்கும் பதற்ற நிலைக்கு பதிலளிக்கும் வகையில், கம்போடியாவில் உள்ள மூன்று கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பகுதிகளின் ஆயர்கள் அனைவரும் இணைந்து, உடனடி தீநிறுத்தமும் அமைதியான தீர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டு அழைப்பு விடுத்துள்ளனர். இது, அனைத்து நிரபராத பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.