உலக அளவில் சீனாவை முந்தி முதலிடத்திற்கு சென்ற இந்தியா || வேரித்தாஸ் செய்திகள்

உலக மக்கள்தொகை குறித்த சமீபத்திய ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பு , இந்த ஆண்டு  சீனாவின் மக்கள்தொகையுடன் இந்தியா போட்டியிட்டு முதலிடத்திற்கு வந்துள்ளது.

ஏப்ரல்  மாதத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 1,425,775,850 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

2020 ஆம் ஆண்டில் சீனாவுடன் ஒப்பிடும்போது  இந்தியா 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் பின்தங்கி இருந்தது  என்று ஐநா தரவுகள்  சுட்டிக்காட்டுகிறது. இது 2022 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான மக்கள் தொகை இடைவெளி 10 மில்லியனுக்கும் அதிகமாக குறைந்தது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட மூன்று மில்லியன்  அதிகமாக இருக்கும் என்றும் ஐநாவின் மக்கள்தொகை பிரிவு கணித்துள்ளது.

ஐநாவின் தரவுகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகை இன்று 1,429,000 ஆகவும், சீனாவின் மக்கள் தொகை 1,426,000 ஆகவும் உள்ளது.

1980 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பெய்ஜிங்கின் வீட்டிற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையின் காரணமாக சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2022 இல் அதன் மக்கள்தொகை 1.411 பில்லியனாகக் குறைந்தது, அதன் புள்ளியியல் கணக்கெடுப்பின்படி , முந்தைய ஆண்டை விட சுமார் 850,000 பேர் குறைந்துள்ளனர்.

புள்ளியலாளர்கள்  கூற்றுப்படி, இந்தியா மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய நாடாக உள்ளது இதன் காரணமாக அரசாங்கத்திற்கு புதிய சவால்களை ஏற்படுத்துகிறது, அதன் வளர்ந்து வரும் மக்கள்தொகை சுகாதாரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அணுகுவதை உள்ளடக்கியது.

UN தரவுகளின்படி, உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டமான இந்தோனேசியா, மக்கள்தொகை அடிப்படையில் 278 மில்லியன் மக்களுடன் இன்று நான்காவது பெரிய நாடாக உள்ளது.

240 மில்லியன் மக்களுடன் பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் மேற்கில் சீனாவையும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் இந்தியாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவின் எல்லையாக இருக்கும் வங்காளதேசம், இன்றைய மக்கள்தொகையில் 8 வது இடத்தில் உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு அறுபது ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை மூன்று மடங்குக்கு மேல் வளர்ந்துள்ளது என்று மே 1 அன்று பிபிசி செய்தி அறிக்கை கூறியது.

1951 இல், இந்தியாவின் மக்கள் தொகை 361 மில்லியன் மக்கள் மட்டுமே. 2011 வாக்கில், அதன் மக்கள் தொகை 1.2 பில்லியனாக அதிரடியாக உயர்ந்தது.

 இனிவரும் 2060   வரை இந்தியா அதன் மக்கள்தொகையை தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஐநா கணித்துள்ளது. ஆனால் அதன்பின்னர்  மக்கள் தொகை 2064 இல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


_அருள்பணி வி.ஜான்சன்

(RVA English News)