அனைத்துலக ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் ! | Veritas Tamil

அமெரிக்காவின் ஆயுதங்கள் அதன் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கியக் கருவியாக மாறிவருவதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக ஆராய்ச்சி நிறுவனமான SIPRI தரவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இது உலகளாவிய ஆயுதச் சந்தையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த 2016 - 20 மற்றும் 2021-25 ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளன. குறிப்பாக, இரஷ்யாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பா மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உருவெடுத்துள்ளது.

உலகின் முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடான அமெரிக்கா, தனது விற்பனையை 27 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவிற்கான அதன் ஏற்றுமதி 217 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய ஆயுதப் பரிமாற்றத்தில் 9.7 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ள உக்ரைன், அமெரிக்க ஆயுதங்களைப் பெறும் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதி 210 விழுக்காடு என்ற அளவில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதில் போலந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை மிக அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடுகளாகத் திகழ்கின்றன.

ஆசியாவிற்கான ஆயுத வரத்து குறைந்துள்ள சூழலில், சீனாவின் இறக்குமதி பாதியாகச் சரிந்துள்ளது. இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் முதன்மை நாடுகளாக நீடிக்கின்றன.

மத்திய கிழக்கிற்கான ஆயுத இறக்குமதி குறைந்துள்ள போதிலும், அங்கு அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடாக சவுதி அரேபியா தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் ஆயுதங்கள் அதன் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கியக் கருவியாக மாறிவருவதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக ஆராய்ச்சி நிறுவனமான SIPRI தரவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இது உலகளாவிய ஆயுதச் சந்தையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நன்றி வத்திக்கான் செய்தி