மணிப்பூர் கலவரத்தை அடக்க உச்ச நீதிமன்றம் தலையீடு || வேரித்தாஸ் செய்திகள்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்து தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இந்த மாநிலத்தை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க தவறியதால் இன்னும் அந்த மாநிலம் கொழுந்துவிட்டு எரிகிறது.
இதன் விளைவாக மாநிலத்தில் அமைதி திரும்ப ஓய்வுபெற்ற மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
நீதிபதி கீதா மிட்டல் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி இந்த ஆணையத்தின் தலைவராகவும், நீதிபதி ஷாலினி பான்சல்கர் ஜோஷி மும்பை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இந்த ஆணையத்தில் இருக்கிறார்கள்.
மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த ஆணையத்தை அமைத்துள்ளது அமைதிக்கான ஒரு முன்னெடுப்பு என்று திருஅவை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நியமிக்கப்பட்ட மூன்று பெண் நீதிபதிகளும் வேறு வேறு மாநிலம் என்பதாலும் எவரும் மணிப்பூரை சார்ந்தவர் இல்லை என்பதாலும் பாதிக்கப்பட்ட மக்களால் நம்பிக்கையோடு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தங்களது புகார்களை பதிவு செய்ய முடியும்.
மூன்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இந்த ஆணையம் உச்ச நீதிமன்ற நீதிபதி D .Y . சந்திரசூட் அவர்களிடம் மறுவாழ்வு, சீரமைக்கப்பட்ட வீடுகள் மட்டும் வழிபாட்டுதளங்கள், புனரமைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, கலவரத்தின் வடுக்கள், போன்ற அறிக்கைகளை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவர்களின் கடமை ஆகும் .
மலையில் வாழும் மியான்மரை எல்லையாக கொண்டிருக்கும் மக்களை இந்த கலவரம் காடுகளுக்குள் அடைக்கலம் தேடி அஞ்சி ஓட வைத்துள்ளது. 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 50000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
கிறிஸ்தவ குக்கி இன மக்களின் வீடுகளும்,சொத்துக்களும் தேவாலயங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதுவரை பெண்களுக்கு எதிரான 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் காவல் அதிகாரி இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு புலனாய்வு துறையின் மூலம் கண்காணித்து வருகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது உள்ள நிலை குறித்தும் சமீபத்தில் வெளிவந்த இரண்டு கிறிஸ்தவ குக்கி இன பெண்களை நிர்வாணமாக பல ஆண்கள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கண்டனம் தெரிவித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மௌனம் காத்து வந்த பிரதமர் மோடி இந்த வீடியோ வைரல் ஆனதைத்தொடர்ந்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.தற்போது 42 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு 6000 க்கும் மேற்பட்ட கலவர வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே இருந்து ஒரு காவல் ஆய்வாளர் உள்பட ஆறு உயர் அதிகாரிகள் ஒவ்வொரு குழுக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு அவர்கள் விசாரணை குழுக்களை கண்காணிப்பார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பாண்மை இந்துக்களான மெய்தி இன மக்களை சமீபத்தில் மலைவாழ் மக்களாக அங்கீகரித்து அவர்களுக்கு மலைவாழ் மக்கள் உரிமையை வழங்கியது.இதன்மூலம் 53 விழுக்காட்டினராக இருக்கும் இந்த மக்கள் மலைவாழ் மக்களின் உரிமைகளை கைப்பற்றுவார்கள். மலைவாழ் பட்டியலில் இவர்கள் சேர்க்கப்பட்டால் கிறிஸ்தவ குக்கி இன மக்களின் மலைகளும், காடுகளும் அழிக்கப்பட்டு அவர்கள் மலைவாழ் மக்கள் என்ற உரிமை பறிக்கப்படும் என்று உணர்ந்தே கிறிஸ்தவ குக்கி இன மக்கள் போராடி வருகின்றனர்.அதன் காரணமாகவே இவர்கள் மீது இந்த ஒரு கொடூர வன்முறை அவர்கள் மீது நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
_அருள்பணி வி.ஜான்சன்
(Source from RVA English News)