வங்கதேச முஸ்லிம் கடைக்காரர் கத்தோலிக்க சமூகத்துடன் நாற்பது ஆண்டுகளாக | Veritas Tamil

வங்கதேச முஸ்லிம் கடைக்காரர் கத்தோலிக்க சமூகத்துடன் நாற்பது ஆண்டுகளாக சமயப்பிணைப்புடன் வாழ்ந்து வருகிறார்.


 நாற்பது ஆண்டுகளாக, டாக்காவில் கடை வைத்திருக்கும் 73 வயதான முகமது அப்துர் ரஷீத் என்ற இஸ்லாமிய  பெண்மணி, சமய உருவப்படங்களை வழங்குவதன் மூலமும், பங்கு மக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் சமய சமூகங்களுடன் நீடித்த உறவுகளைக் கட்டியெழுப்புவதன் மூலமும் கத்தோலிக்க சமூகத்திற்குச் சேவை செய்து வருகிறார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில், “சபைசார் மனமாற்றத்திற்கான அழைப்பு மற்றும் ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களைக் கட்டுபவர்களாகவும் இருப்பதற்கான பணி” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவிருக்கும் 12வது ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) முழுமையான மாநாட்டிற்கு ஆசிய கத்தோலிக்கத் திருஅவை தயாராகி வரும் வேளையில், சமய சமூகங்கள் முழுவதும் நிகழும் அன்றாட சந்திப்புகளின் கதைகள், அன்றாட வாழ்வில் உரையாடலும் ஒத்துழைப்பும் எவ்வாறு வடிவம் பெறுகின்றன என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகின்றன.

இதற்கு ஓர் உதாரணத்தை வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் காணலாம். அங்கு ஒரு இஸ்லாமிய  கடைக்காரர்இ கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக ஒரு கத்தோலிக்க சமூகத்திற்கு மத உருவப்படங்களை வழங்குவதன் மூலமும்இ பங்கு மக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் மத சமூகங்களுடன் உறவுகளை வளர்ப்பதன் மூலமும் சேவை செய்து வருகிறார்.

டாக்காவின் ஃபார்ம்கேட் பகுதியில் உள்ள தேஜ்கான் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ரஷீத் கிளாஸ் ஹவுஸ்' உரிமையாளரான, 73 வயதான முகமது அப்துர் ரஷீத்தைப் பொறுத்தவரை, இயேசு கிறிஸ்து, புனித கன்னி மரியா, திருக்குடும்பம், புனித யோசேப்பு, புனித அந்தோணி, கல்கத்தாவின் புனித தெரசா, மற்றும் திருத்தந்தை லியோ IV அவர்களின் உருவப்படங்கள் போன்ற  படங்களை விற்பனை செய்வது 1988 ஆம் ஆண்டு முதல் அவரது தொழிலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

தேஜ்கான் பங்கு ஆலயம் மற்றும் ஹோலி கிராஸ் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கடை, வங்காளதேசத்தின் மிகப்பெரிய கத்தோலிக்க சமூகங்களில் ஒன்றிற்குச் சேவை செய்கிறது. இந்தப் பங்கு ஆலயத்தில் 10இ000-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் வசிக்கின்றனர்; இவர்களில், வேலைவாய்ப்புக்காக கிராமப்புறங்களிலிருந்து டாக்காவுக்குக் குடிபெயர்ந்த பல குடும்பங்களும் அடங்கும்.

இஸ்லாமியரான  ரஷீத், கத்தோலிக்க சமூகத்துடனான தனது தொடர்பு ஒரு வணிக வாய்ப்பாகத் தொடங்கி, பின்னர் பரஸ்பர நம்பிக்கையின் உறவாக வளர்ந்ததாகக் கூறினார்.

“நான் ஒரு கல்லூரி மாணவனாக இருந்தபோது, புகை​ப்படம் கட்டும் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். பின்னர், ஃபார்ம்கேட் அருகே எனது சொந்தத் தொழிலைத் தொடங்கினேன். ஒரு நாள், தேவாலயத்தைக் கடந்து சென்றபோது, ​​ஒருவர் ஒரு மேசையில் இயேசுவின் படங்களை விற்பதைக் கவனித்தேன். அதனால், நானும் கிறிஸ்தவ மதப் படங்களை விற்கத் தொடங்கினேன்” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

பல ஆண்டுகளாக, இந்தத் தொழில் விரிவடைந்துள்ளது. தற்போது அவரது மகன் கடையை நிர்வகிக்க உதவுகிறார்; இந்தக் கடை, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நகல் எடுக்கும் சேவைகளையும் வழங்குகிறது. தனது வாடிக்கையாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள் என்று ரஷீத் மதிப்பிடுகிறார்.


“என் கடைக்கு அருட்தந்தைநயர்கள், அருட்சகோதரிகள்  சகோதரர்கள், சில சமயங்களில் ஆயர்கள் கூட வருகிறார்கள்,” என்றார் அவர். “அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாகப் பேசுகிறார்கள். அவர்களைச் சந்திப்பதை நான் விரும்புகிறேன்.”

கிறிஸ்தவ மதப் பொருட்களை விற்பனை செய்ததற்காக, தனது சொந்த இஸ்லாமிய  சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஒருபோதும் விமர்சனத்தை எதிர்கொண்டதில்லை என்று ரஷீத் கூறினார்.

அவரது கடைக்குள், கிறிஸ்தவ உருவப்படங்கள், இஸ்லாமிய கையெழுத்துக்கலை, மக்கா மற்றும் மதீனாவின் படங்கள் மற்றும் குர்ஆன் வசனங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கத்தோலிக்க வாடிக்கையாளர்களுக்கு, பக்திப் பொருட்களைப் பெறுவதற்கு இந்தக் கடை ஒரு பரிச்சயமான இடமாக மாறியுள்ளது. தொழிலதிபரும் நீண்டகால வாடிக்கையாளருமான சுபிர் கோம்ஸ், சமீபத்தில் தனது குடும்பத்திற்காக இறுதி இரவு உணவு மற்றும் கன்னி மேரியின் சட்டமிடப்பட்ட படங்களை வாங்கினார்.

"வீட்டில் மத சம்பந்தமான படங்கள் இருக்கும்போது, ​​மக்கள் அவற்றின் முன் பிரார்த்தனை செய்யலாம்," என்று கோம்ஸ் கூறினார். "கடினமான தருணங்களில், அந்தப் பிரார்த்தனை அமைதியைத் தருகிறது."

கத்தோலிக்க சமூகத்திற்கு ரஷீத் ஆற்றிய சேவைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

"அவர் ஒரு இஸ்வாமியராக  இருந்தாலும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான சேவையை வழங்குகிறார்," என்று கோம்ஸ் கூறினார். "அவர் செய்வதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்."

வங்காளதேசம் சுமார் 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடாகும், இதில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை சுமார் 450,000 ஆகும். தேஜ்கானின் கத்தோலிக்க சமூகத்துடன் ரஷீதுக்கு இருக்கும் நீண்டகாலத் தொடர்பு, வேலை மற்றும் அக்கம்பக்க வாழ்க்கை மூலம் உருவாகும் சாதாரண உறவுகள், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே பரஸ்பர புரிதலுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பிரதிபலிக்கிறது.

தேஜ்கான் தேவாலயத்திற்கு அருகிலுள்ள கத்தோலிக்க சமூகத்தினருக்கு, ரஷீத்தின் கடை என்பதுஇ நம்பிக்கை, மரியாதை மற்றும் பகிரப்பட்ட சமூக வாழ்க்கை ஆகியவற்றால் இணைக்கப்பட்ட, வெவ்வேறு மத மரபுகளைச் சேர்ந்த அண்டை அயலாரின் அன்றாட சந்திப்பைக் குறிக்கிறது.

Tamil Survey Popup Image