மனந்திரும்புதல் கடவுளின் இரக்கத்திற்கு இதயங்களைத் திறக்கிறது. | ஆர்.கே. சாமி | Veritas Tamil

30 ஜனவரி 2026
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – வெள்ளி

2 சாமுவேல  11: 1-4a, c, 5-10a, 13-17
மாற்கு  4: 26-34
 
 மனந்திரும்புதல் கடவுளின் இரக்கத்திற்கு இதயங்களைத் திறக்கிறது.


முதல் வாசகம்.

 
இன்றைய வாசகப் பகுதி,  தாவீது அரசரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கியமான மற்றும் சோகமான நிகழ்வை விவரிக்கிறது.

வீரர்கள் போரில் ஈடுபட்டிருந்த போது, தாவீது  ஒரு மாலையில் தனது அரண்மனையின் மாடியிலிருந்து, ஓர் அழகான பெண் குளிப்பதைக் கவனிக்கிறார். அவள் ஏத்தியனான உரியாவின் மனைவி பத்சேபா என்பதை பின்னர் கேட்டறிகிறார்.  தாவீது பத்சேபாளை வரவழைத்து, அவளுடன் தகாத உறவுகொள்கறார்.  

பின்னர் அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து,  தான் தப்பித்துக்கொள்ள ஒரு சூழ்ச்சி செய்கிறார். தனது குற்றத்தை மறைக்க, தாவீது பத்சேபாவின் கணவரான  உரியாவை போர்க்களத்திலிருந்து திரும்ப அழைக்கிறார். பத்சேபாவின் கருவில் இருப்பது  உரியாவின் குழந்தை என்று தோன்றச் செய்ய, உரியாவை வீட்டிலேயே தூங்க வைக்க முயற்சிக்கிறார். 

தனது சக வீரர்களிடம் விசுவாசமாக இருந்து உரியா வீட்டிற்குச் செல்ல மறுத்தபோது, போரின் மிகக் கடுமையான பகுதியில் உரியாவை அனுப்பியதால் உரியா போரில் கொல்லப்படுகிறார். 

 
நறசெய்தி.


இந்தப் பகுதியில், இயேசு இறையரசைப் பற்றி இரு  உவமைகளைப் பயன்படுத்திக் கற்பிக்கிறார்:

இறையரசை தரையில் விதைகளை விதைக்கும் ஒரு மனிதனுக்கு ஒப்பிடுகிறார். விதை முளைத்து, இரவும் பகலும் தானாகவே வளரும், விதைப்பவருக்கு அது எப்படி நடக்கிறது என்பதை முழுமையாகப் புரியாது.  

பின்னர் இயேசு இறையரசை  ஒரு கடுகு விதையுடன் ஒப்பிடுகிறார் - மிகச் சிறிய விதைகளில் ஒன்றான கடுகு விதை  விதைக்கும் பட்டதும்  அது ஒரு பெரிய செடியாக, மரமாக  வளர்கிறது, அது அதன் கிளைகளில் பறவைகளுக்கு அடைக்கலம் தருகிறது.

இந்த உவமைகள், மக்கள் இறையரின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும் எளிய உவமைக்ள ஆகும்.  இந்தப் போதனைகளில் சிலவற்றை அவர் தனது சீடர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்குகிறார்.


சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில் தாவீது அரசர், கடவுள் வழங்கிய பத்து கட்டளைகளை நன்கு  அறிந்திருக்க்கூடும். அவற்றுள் ஒன்று ‘பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே’ (விப 20:17) என்பதாகும். 


தாவீதின் பலவீனம் படிப்படியாக வெளிப்படுகிறது - முதலில் அரசனாகப்  போருக்குத் தலைமை தாங்காமல் அரண்மனையில் தங்கியது, கடமையின் மீதான அலட்சியம், பின்னர் காமம், வஞ்சகம் மற்றும் இறுதியில் திட்டமிடப்பட்ட கொலை இவற்றில் தாவீது பெரும் குற்றம் புரிகிறார். மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை என்பது முதுமொழி. ஆம்,  நீதி தவறாத ஆட்சியை அமைப்பதே அரசனுக்கு அழகு.


தாவீதின் தான் தப்பித்துக்கொள்ள பத்சேபாவின் கணவரான  உரியாவை  இறுதியில் சூழ்ச்சி செய்து கொலை செய்கிறார். ஒரு தவறான தேர்வு எவ்வாறு பெரும் தவறுகளுக்கு வழிவகுக்கும் என்பதை இது காட்டுகிறது.


நற்செய்தியில், முதல் உவமை, விதைப்பவர் தனது வயல்களில் தூவும் விதையின் அதிசயமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறது: "அவர் இரவும் பகலும் தூங்கி எழுந்திருந்தார், விதை முளைத்து வளர்ந்தது, அவருக்குத் தெரியாது" (மாற்கு 4:27). இது கடவுளின் அருளின்  படிப்படியான வேலையை வலியுறுத்துகிறது. விதைப்பவர் எவ்வாறு முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் மண்ணில் வளரும் விதையைப் போலவே, கடவுளின் அரசும் அமைதியாகவும் ஆற்றல் மிக்கதாகவும் நம்மில் வளர்கிறது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

இரண்டாவது உவமை கடுகு விதையைப் பற்றியது, இது விதைகளில் மிகச் சிறியது, அது நடப்படும்போது, "முளைத்து, தாவரங்களில் மிகப்பெரியதாகி, பெரிய கிளைகளை விட்டு, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் வசிக்க ஏதுவாக மாறுகிறது.  (மாற்கு 4:32). இந்த உவமை இறையரசின் உருமாற்ற சக்தியை வெளிப்படுத்துகிறது,    

இனைறய சிந்த்னையில் நாம் தூய ஆவியானவர் கடவுளுடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.  அனுமதித்தோமானால் நாளுக்கு நாள் நமது உள்ளமும் பக்குவமாகி இறையரசின் தன்மைகளை நாம் பெற்று ஆளாகுவோம். கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. மறைநூல் அல்லது திருவிவிலியம்  என்பது என்றோ யாருக்கோ எழுதப்பட்ட   ஒரு பண்டைய தத்துவ நூல் அல்ல. அது இன்று நமக்காக எழுதப்படும் ஒரு நூல்.  முதல் வாசகம், ஓர் ஆற்றல்மிக்க தலைவரான தாவீது, சோதனைக்கு ஆளாகி, தீங்கு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் கடுமையான தவறுகளைச் செய்வதைக் காட்டுகிறது. காம இச்சைக்கு ஆளான ஒரு கொலைக்காரன்.
  

நற்செய்தி கடவுளின் அரசு எவ்வாறு அமைதியாகவும் அதிசயமாகவும் வளர்கிறது என்பதைக் காட்டுகிறது.  நாம் பாவிகள்தான் ஆனால் ஆண்டவரோ பாவிகளை வெறுப்பவர் அல்ல. தாவீதையும் பெரும் குற்றத்திலிருந்து அவரை அவராக ஏற்றுக்கொண்டு, தம் மகனை அவரது வழிமரபில் மனுவுருவாக வழிவகுத்தார். மனமாற்றமே இன்றியமையாதது.


இறைவேண்டல்.


ஆண்டவரே,  உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருள்வீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452