இயேசுவில் வேரூன்றிய சகோதரத்துவம் நமதாகட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்
எபிரேயர் 9: 15, 24-28
மாற்கு 3: 22-30
தூய ஆவியானவர் நம்மை புதுப்பிக்கும் கடவுள்!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று உண்டானது புதிய உடன்படிக்கை என்று நமக்கு இன்று நினைவூட்டப்படுகிறது. இந்த புதிய உடன்படிக்கையானது, இயேசு கறிஸ்துவின் சிலுவை மரணத்தால் விளைந்தது என்கிறார் ஆசிரியர்.
பழைய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து இயேசவின் திருஇரத்தால் அவர் பெற்றுத் தந்த மீட்பு நம்மை விண்ணுலகிற்குள்ளேயே நுழையும் அரிய வாப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்கிறார் ஆசிரியர். மேலும், இயேச…
[08:42, 27/1/2025] RK Samy Malaysia: இன்றைய இறை உணவு
28 சனவரி 2025
பொதுக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய்
எபிரேயர் 10: 1-10
மாற்கு 3: 31-35
இயேசுவில் வேரூன்றிய சகோதரத்துவம் நமதாகட்டும்!
முதல் வாசகம்.
கடவுளின் திருவுள்தை நிறைவேற்றுவது இன்றைய வாசகங்களின் வலியுறுத்தலாக உள்ளது.
எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் ஆசிரியர், இயேசு தம் தந்தையின் திருவுளத்தை அல்லது விருப்பத்தை நிறைவேற்றினார் என்றும், அதன் விளைவாகவே நாம் அனைவரும் தூய்மைப் பெற்றோம் என்பதையும் நினைவூட்டுகிறார்.
மனுக்குலத்திற்கு மீட்பைக் கொண்டுவர அவர் அனுப்பிய ஒரே மகனான இயேசுவை, சிலுவை மரணத்தைத் தவிர்த்து, வேறு பாதுகாப்பான வழியில் மீட்பு கொண்டு வர கடவுள் விரும்பியிருக்கலாம். இருப்பினும், இயேசு தம் இரத்தத்தை சிந்தி சிலுவையில் இறக்க வேண்டும் என்று கடவுள் விரும்பினார்.
இயேசுவும் தம் தந்தையின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தார். அவரது மரணம் அவரது கீழ்ப்படிதலின் இறுதிச் செயலாக மாறியது. அது சிலுவை மரணம் சரியான கீழ்ப்படிதல் என்பதால், அது ஒரு முறை மட்டுமே நிறைவேற்றும் பலியாக இருந்தது என்கிறார் ஆசிரியர்.
பழைய உடன்படிக்கையில், பலிகள் ஆலயத்தில் தொடர்ந்து செலுத்தப்பட்டன. மனுக்குலத்தின் மீட்புக்கு அத்தகையப்பலி ஏற்றதல்ல. பாவம் அகற்றப்பட வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை அடையாளப்படுத்த மட்டுமே அவர்கள் விலங்குகளின் இரத்தத்தைப் பயன்படுத்தினர்.
விலங்குகளின் இரத்தத்தால் பாவத்தைப் போக்க முடியாது. உண்மையான கடவுளாகவும் உண்மையான மனிதனாகவும் இருந்த இயேசுவின் இரத்தம் தேவைப்பட்டது. அதுவே தந்தையின் விருப்பம். இயேசுவின் இரத்தம் வெறும் சடங்குப்பூர்வமானது அல்ல. அது மனுக்குலத்தின் பாவம் போக்க உலகில் ஒரே ஒருமுறை கல்வாரியில் ஒப்புக்கொடுக்கப்பட்ட பலி. இப்பலிக்கு ஈடாகவோ ஒப்பாகவோ வேறு பலி கிடையாது என்கிறார் ஆசிரியர்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்த இடத்திற்கு வெளியே அவருடைய உறவினர்கள் (அவரது தாய் உட்பட) இருப்பதாக இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இயேசு, செய்தி தெரிவித்தவர்களைப் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
சிந்தனைக்கு.
இன்று புனித மாற்கு நம்முடன் பகிர்ந்து கொள்ளும் "நற்செய்தி" அனைவரும் மனதில் நிறுத்தி, ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட அழைக்கும் செய்தியாகும். நாம் நம்மைச் சுற்றி நெருக்கமாக உள்ள பெற்றோரும் இரத்த உறவில் வந்த உறவினர்களும் தான் மிகவும் வேண்டியவர்கள் என்று நினைக்கலாம்.
இயேசுவின் படிப்பனை இதற்கு மாறுபட்டதாக உள்ளது.
இறையரசுப் பணியில் கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே அவருக்கு நெருங்கிய உறவினர்கள் என்கிறார். இது பொதுவான ஒரு போதனை. ஆனால், பலர் இதை வைத்து, இயேசு அவரது அன்னை மரியாவையும் உடன் வந்த சகோதர சகோதரிகளையும் வெறுத்துப் பேசினார் என்று கருதுவது தவறு.
இது அவருடைய தாயையோ அல்லது மற்ற உறவினர்களையோஅவமதித்ததாக பலரால் பொருள் கொள்ளப்படுகிறது. மாறாக மக்கள் எவ்வளவு அதிகமாக கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவருடனும் தந்தையுடனும் உறவில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு எடுத்துரைக்க அச்சூழலை இயேசு பயன்படுத்திக் கொண்டார் என்பதாக நாம் பொருள் கொள்ளலாம்.
இயேசுவைத் தவிர்த்து, கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்த ஒரே மனிதர் மரியாதான்.
இங்கே மற்றொரு விடயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு தனது அன்பான தாய் மரியா மீது நிறைவான அன்பைக் கொண்டிருந்தார் என்பதையும், மரியாவும் இயேசுவில் அளவற்ற அன்புகொண்டிருந்ந்தார் என்பதையும் நாம் அறிவோம். நற்செய்தியில் அவரது "சகோதரர்கள்" என்று மாற்கு குறிப்படுள்ளது பெரும் தர்க்கதத்திற்கு ஒன்றானதாக உள்ளது.
இயேசவின் காலத்தில் யூதர்கள் மத்தியில் ‘சகோதரர்’ என்ற சொல்லின் பொருள் உடன் பிறந்தோரை மட்டும் குறிப்பதல்ல. பெரியப்பா மற்றும் சிற்றப்பா மக்களையும் குறிக்கும். இன்று ஆங்கித்தில் cousins என்று சொல்லைப் பயன்படுத்தி உடன் பிறந்தோரை வேறுபடுத்திக் காட்டுகிறோம். இயேசுவின் காலத்தில் பொதுவாக ‘சகோதர்கள்’ என்றே குறிப்பிட்டு அழைப்பதுண்டு. ஆகவே, அக்கலாத்தின் வழக்கத்தில் இருந்த உறவு முறைக்கு ஏற்ப பொருள் காண வேண்டும்.
மேலும், சிலர் யோசேப்பின் முதல் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள்தான் மரியாவோடு வந்திருந்தனர் என்றும் கூறுகிறார்கள். இதற்கு விவிலியத்தில் ஆதாரம் இல்லை.
எனவே, இக்கூற்றைப் பெருட்படுத்த வேண்டியதில்லை. மரியா என்னென்றும் கன்னி என்பதே நமக்குத் தூய ஆவியார் உறுதிப்படுத்திய உண்மை. இயேசு தம் தாயாரை கல்வாரியில் தம் சீடரிடம் தான் ஒப்படைத்தார்.
நமது இரத்த உறவிலான உறவை மதிக்கும் அதே வேளையில் ஆன்மீக ரீதியில் ஏற்படும் மற்ற உறவையும் மதிக்க வேண்டும். அத்துடன் இயேசு வலியுறுத்துவதைப் போல் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற துணிவோருக்கு நாம் பக்க பலமாக இருக்க வேண்டும்.
கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப வாழும் அனைவருக்கும் நாம் ‘சகோதர சகோரதரிகளே’. இங்கே இரத்த உறவுக்கு முதன்மையிஃலை.
இறைவேண்டல்.
அன்புள்ள ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழும் உமது மிக நெருக்கமான இறைமக்கள் குடும்பதில், உமது அருளால்,
நானும் சகோரத உறவு கொண்டு வாழ விரும்புகிறேன். என்னை உருமாற்றுவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
