வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது - திருப்பாடல்கள் 19-1. ஆண்டவர் நம்மோடு பேசுகிறவர். அவர் இயற்கையின் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். வானத்தைப் பார்க்கும்போது அது கடவுளுடைய மகிமையை சொல்லுகிறது. வானத்திலுள்ள மேகங்களையெல்லாம் அவருடைய கை வன்மையை காட்டுகிறது.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் - 1 கொரிந்தியர் 13-7. அன்பு சகலத்தையும் பொறுத்து கொள்ளும் என்றால், வேறு வழியின்றி பொறுத்து கொள்ளும் என்று அர்த்தம் இல்லை. துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவற்றை தாங்கி கொள்ளும் என்பதுதான் இதற்கு அர்த்தமாகும்.
அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர். திருத்தூதர் பணிகள் 10-2. செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். அவர் இடைவிடாது ஜெபிப்பவர். அதோடு இரக்க செயல்களும் செய்பவர். நம் வாழ்வில் நாம் வேண்டலோடு நல்ல செயல்களும் செய்ய வேண்டும்.
அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார். லூக்கா 8-46. பன்னிரண்டு ஆண்டுகளாக பெரும்பாடுள்ள பெண் எப்படியாவது சுகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி,மக்கள் கூட்டம் என்றும் பாராமல், முந்தியடித்துக்கொண்டு அவருடைய ஆடையின் ஓரத்தைத் தான் தொட்டாள். என்ன ஆச்சரியம்! .யேசுவின் ஆடையிருந்து ஒரு வல்லமை வெளிப்பட்டு அந்த பெண்ணை குணமாக்கியது.
கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.
நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள். யோசுவா 6-18. ஆண்டவர் நம்மை அழிவுக்கு எடுத்து செல்லும் பொருட்களை, அதாவது ஆண்டவருக்கு விருப்பமில்லாத செயல்கள் மூலமாக வந்த பணம் பொருள் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள் என கூறுகிறார்.
உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார். நீதிமொழிகள் 28-20. நாம் ஆசீர்வாதத்தை விரும்பினால் உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டும். இன்று உலகம் உண்மையற்ற நிலைமையை நோக்கி ஓடுகிறது. எதற்கெடுத்தாலும் பொய். பொய் சொல்லி காரியத்தைச் சாதிக்க எண்ணுகிறார்கள்.கணவன் மனைவிக்குள் உண்மை இல்லை. பெற்றோர் பிள்ளைகளுக்குள் உண்மை இல்லை.
மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு. 1 கொரிந்தியர் 15-43,44. நீதிமான் நம்பிக்கையோடுகூட உலகை விட்டு கடந்து போகிறார். அவருக்கு ஒரு மகிமையான விண்ணக வாழ்வு பற்றி எதிர்பார்ப்புண்டு.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். திருப்பாடல்கள் 63.1-2.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் - 1 தெசலோனிக்கர் 5-17. நாம் வேண்டுகிற ஜெபம் கிடைக்க தாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து இடைவிடாது ஜெபிக்க வேண்டும். சோர்ந்து போகாமல் ஆண்டவர்கிட்ட கேட்டால் நிச்சயமாக அது நமக்கு கிடைக்கும். இல்லையெனில் அவர் வேறு ஒன்றை அதை விட நல்லதாக தருவார்.
அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார் - 2 அரசர்கள் 4-43. ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது இறைவாக்கினர் எலிசாவின் குழுவினருக்கு பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார்.
முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார் - மத்தேயு 19-30. ஆண்டவர் நம்மை அழைத்துள்ளார். நிறைவாக ஆசீர்வத்திதுள்ளார். அதனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நாம் இருக்க கூடாது. நாம் அழைத்த அழைப்பில் நிற்காமல் வழி தவறினால் நிச்சயமாக நாம் பின் தள்ளப்படுவோம். ஆண்டவர் முதலில் சவுல் அரசரை அரசராக்கினார். அபிசேகம் பண்ணினார். ஆனால் சவுல் ஆண்டவருடைய வார்த்தையை விட்டு வழி மாறுகிறார். எனவே ஆண்டவர் சவுலை விட்டு தாவீதை தேர்ந்தெடுக்கிறார்.
நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது - விடுதலைப் பயணம் 18-18. இந்த உலகத்தில் குடும்ப பாரம், பிள்ளைகளைப் பற்றிய கவலை, கடன் என எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களால் நாம் சோர்ந்து போகிறோம். அவை நம் மன அமைதியை கெடுக்கிறது.
அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார் - தொடக்க நூல் 32-26. நம்மில் சிலர் ஆண்டவருடைய இரக்கத்தின் படி ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். சிலர் போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஆண்டவர் தாமாகவே வந்து மகிழ்ச்சியோடு தரும் ஆசீர்வாதங்களுமுண்டு. நாம் கேட்கும்போது கொடுப்பதற்கென்று அவர் தன்னிடம் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களுமுண்டு.
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள் - யாக்கோபு 4:10. ஆண்டவருக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேஉறவுப்பாலம்/நன்றி-சொல்லண்டும். சமயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவருக்கென்று ஒரு சமயத்தை ஒதுக்க வேண்டும்.
மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் - எசாயா 54:10. மலைகள் எவ்வளவு உறுதியானவை. அதை யாராவது நகர்த்தி இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியுமா. இல்லை அவைதான் தானே இடம் மாறி செல்லுமா.
பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள் - மத்தேயு 12:7. நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். வீட்டில் மாமியார் மாமனாருடன் சண்டை போட்டு அவர்களை மனம் நோக செய்துவிட்டு பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு, நாம் கொடுக்கும் காணிக்கைகள் ஆண்டவருக்கு உகந்ததல்ல என்று ஆண்டவர் கூறுகிறார்.
நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை - எபிரேயர் 11:1. ஆண்டவர்மீது நாம் வைத்துள்ள நமபிக்கை என்பது உறுதியாக இருக்கவேண்டும். அவை நம் கண்ணுக்கு தெரியாத போதும் அதற்கான அடையாளங்கள், வழிகள் எதுவும் தென்படாத போதும் சந்தேகமற்ற நம்பிக்கையாக இருக்க வேண்டும்.