உம் அன்பை

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள் - மத்தேயு 12:7. நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே கடவுள் நம்மிடம்  எதிர்பார்க்கிறார். வீட்டில் மாமியார் மாமனாருடன் சண்டை போட்டு  அவர்களை மனம் நோக செய்துவிட்டு பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு, நாம் கொடுக்கும் காணிக்கைகள் ஆண்டவருக்கு உகந்ததல்ல என்று ஆண்டவர் கூறுகிறார். 

பிறரிடம் இரக்கம் காட்டுங்கள். நீ காணிக்கை செலுத்தும் முன்  உன் சகோதரனிடம் மனத்தாங்கல் இருந்தால் முதலில் போய் உன் சகோதரனிடம் சமாதானம் செய்துவிட்டு வந்து உன் காணிக்கையை  செலுத்து . அப்போது உன் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறார். 

சிந்தனை:  நாம் நம் உறவுகளிடம் அன்பாக இரக்கத்துடன் நடந்து கொள்கிறோமா?  நம் காணிக்கைகள் ஆண்டவருக்கு ஏற்றவையாக உள்ளதா? சிந்திப்போம்.

ஜெபம்: ஆண்டவரே  எங்கள் பெற்றோர், உறவுகளை மனநோக செய்த சமயங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் பிறரை அன்பு செய்வதன் மூலம் உம் அன்பை பெற்றுக்கொள்ள வரம் தாரும்.