நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம்
மார்ச் 1997 இல் குரிடிபா பிரேசிலில் அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதல் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. அதில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் மார்ச் 14 அன்று நடைபெறும் என்று முடிவு செய்தனர். இந்த சர்வதேச நதிகளுக்கான நடவடிக்கை தினத்தின் நோக்கம், அழிவுகரமான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக ஒருமித்த குரலை எழுப்புவதும், நமது நீர்நிலைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதும், நமது நதிகளின் சமமான மற்றும் நிலையான நிர்வாகத்தைக் கோருவதும் ஆகும்.
கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.