முழு மனதோடு

ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

தொடக்க நூல் 4-4

ஆண்டவர் நாம் அன்போடு , நிறைவோடு , முழு மனதோடு கொடுக்கிற எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறவர்.  ஆபேலின் காணிக்கை மிகவும் விருப்பமாக இருந்தது. அதை மன மகிழ்வோடு ஏற்று கொள்கிறார். காயினின் காணிக்கை அவருக்கு  நிறைவை தரவில்லை. 

நாம் கொடுக்கும் அளவையோ, தகுதியையோ அவர் பார்ப்பதில்லை.  மனதின் விருப்பத்தை, நிறைவை பார்க்கின்ற இறைவன். எனவே ஆண்டவருக்கு என்று எதை கொடுத்தாலும் முழு மனதோடு நம்மிடத்தில் உள்ளதில், முதன்மையானதாக கொடுப்போம் . அவரால் முதன்மை படுத்தப்படுவோம்.  அவருடைய ஆசீரை பெறுவோம். 

 

ஆண்டவரே எங்களுக்கு இருக்கும் ஆற்றல், அறிவு, பணம் பதவி, புகழ் அனைத்துமே நீர் எங்களுக்கு இலவசமாக கொடுத்தீர் . இன்று நாங்களோ  எங்கள் தாழ்மையான, உம்மை புகழும், மனதை உமக்கு கொடுக்கிறோம். ஏற்று கொள்ளும்.  ஆசீர்வதியும் . ஆமென்