காண்கின்ற இறைவன்

அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.

தொடக்க நூல் 16-13.

 சாராய் ஆகாரை கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அவர் அவளை நோக்கி,  நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டதும் அவள், “என் தலைவி சாராயிடமிருந்து  தப்பி ஓடுகிறேன்” என்றாள். ஆண்டவரின் தூதர் , “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று  பணிந்து நட,  என்றார். நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.  ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார் என்றார்.ஆகாரின் பரிதவிப்பை பார்த்தார்.  ஆறுதல் கூறுகிறார். உன்னையும் பெரிய இனம் ஆக்குவேன் என்கிறார்.

ஆண்டவர் உதவியில்லாமல் வழி தெரியாது நிற்கும் நேரத்தில் உதவி கரம் நீட்டுவார். நம் கண்ணீரை காண்கிற கடவுள். நமக்கு பாது காப்பு  தருகிற கடவுள். நம் ஒவ்வொரு செயலையும் கவனிக்கும் தந்தை.

 

அன்பு தந்தையே , ஆண்டவரே உம் கண்ணுக்கு மறைவானது எதுவும் இல்லையே.  நீர் எங்களுக்கு தேவையை அறிந்தூதவி செய்யும் அன்பு தந்தை. உம்மை போற்றுகிறோம் . எங்களுக்குத் நல்ல மழையாய் தாரும். எல்லாரும் மகிழ்வோடு வாழ அருள் புரியும் .ஆமென்