உறுதியாக இருக்க

அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

லூக்கா 6-48.

 கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு அதிகமான திட்டமிடப்பட்டு அதிக முயற்சிகளுக்கு பின் கட்டப்படுகிறது . மணல் மீது  கட்டப்பட்ட வீடோ ,   அஸ்திபாரம் பலமில்லாமல் கட்டப்படுகிறது . அந்த கட்டிடம், புயல் வீசினாலோ, அலைகள் மோதினாலோ, பூமி அதிர்ந்தாலோ உறுதியில்லாமல் இடிந்து விடுகிறது  அந்த வீட்டின் உள்ளே தங்கியிருக்கிறவர்களும் ஆபத்தில் இருக்கிறார்கள். ஆனால் கற்பாறையின்மேல் கட்டப்பட்ட வீடோ அசையாமல் உறுதியுள்ளதாயிருக்கும்.

 நாம்  எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் இயேசுவை முன் வைத்து எடுக்கப்பட்ட  தீர்மானங்களாய்,  இருக்கும்போது நாம் அசைக்கப்படுவதில்லை.

 சிலர்  புகழிலும், படிப்பிலும், சிலர் செல்வத்திலும் செல்வாக்கிலும் அஸ்திபாரமிடுகிறார்கள். ஆனால் அவை யாவுமே மணலின்மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் என்பதை அறியாதிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முன்னதாக இயேசுவை முன் வைத்த திட்டங்கள் அனைத்திலும் இயேசு நம்மோடு இருந்து வழி நடத்துவார். 

  ஒரு  கிருஸ்தவனுடைய வாழ்க்கை ஆண்டவரின் மீதுள்ள நம்பிக்கையில் அஸ்திபாரமிடப்பட்டு இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் எந்த நோய், கஷ்டங்கள், துன்பங்கள், இடர்கள், தடைகள் வந்தாலும்  நம் நம்பிக்கை அசைக்கப்படாது. நம் வாழ்வு அழிவுராது . வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

ஜெபம் :. ஆண்டவரே எங்கள் வாழ்வின் எல்லா தீர்மானங்களிலும் உம்மையே முன் நிறுத்துகிறோம். எங்கள் நம்பிக்கை கற்பறையின் மேல் கட்டப்பட்ட வீடாக அசைவுறாது உம்மிலே பலப்பட்டு உறுதியாக இருக்க உமது தூய ஆவியின் அருளை எங்களுக்கு தாரும். ஆமென்.