உதவும் ஆண்டவரே

ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.⒫

தொடக்க நூல் 22-14.

.ஆபிரகாம்  ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ் படிந்து தம் மகனை பலியிட  தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.

அப்போது ஆண்டவர் ஆபிரகாம் தன் மகனை  பலியிட தயங்காத அவர் விசுவாசத்தை பார்த்து , அவர் கடவுளுக்கு அஞ்சுபவர் என்பதை அறிந்து  அவர் மகனை பலியிடுவதை தடுக்கிறார். ஆபிரகாம் கண்களில்  , முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயை காட்டுகிறார். . உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.

ஆண்டவர் எல்லாம் பார்த்து கொள்கிற இறைவன். அவரை நம்பி அவர் வார்த்தைக்கு நாம் கீழ்பணிந்தால்  நம்மை  காப்பார்.நம் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார். நம் மனதுக்கு அமைதியையும் ,  சந்தோசத்தையும், நிறைவான வாழ்வையும் தருவார். நமக்கு தேவையான எல்லாமே அவரால் பார்த்து பார்த்துகொள்ளப்படும்.

 

 ஆண்டவரே,  மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும்  உண்டாக்கிய ஆண்டவராகிய உம்மிடமிருந்து எனக்கு உதவி வரும்.  என் தேவைகளை சந்தியும். எனக்குரிய எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் ஆமென்.