இனிய வேண்டல்

அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.⒫

தொடக்க நூல் 18-32.

ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? என்றார்

 ஒரு நகரில் இருக்கின்ற நீதிமான்கள் பொருட்டு அந்த நகர் காப்பாற்ற படுமா என்று கேட்டார். ஆண்டவர் பத்து நீதிமான்கள் இருந்தால் கூட அந்நகரை அழிக்க மாட்டேன் என்கிறார்.

ஆண்டவர் அழிக்கும் இறைவன் அல்ல. காப்பாற்றுகிற கடவுள். நம் பாவங்களுக்காக தன்னையே பலி கொடுத்தவர். இரத்தம் சிந்தி நம்மை மீட்டவர். அவ்வளவு அன்பு கொண்ட கடவுள் நமக்கு தீங்கை விடுவாரோ. நிச்சயமாக மாட்டார்.  . கொடிய பாவத்தில் அமிழ்ந்திருந்த அந்த நகரில், நோவா மட்டுமே நீதிமானாயிருந்ததால், ஆண்டவர் , நோவாவையும் அவரை சார்ந்தவர்களையும் மட்டும் பாதுகாத்தார். 

நீதிமானுக்கு சோதனைகள் வரும் .ஆனால் அவர் அழிவுருவதில்லை. ஏனென்றால் ஆண்டவர் அவரோடு இருப்பார். என்றும் பாதுகாப்பார்.

 

அன்பு ஆண்டவரே உமக்கு நன்றி.  இந்த நாளில் எங்களோடு வந்து தங்கும்., பாவ கறையின்றி தூய மனதோடு வாழவும்,  சோதனைகளை எதிர்கொள்ளவும், உம் பிள்ளைகளாக வெற்றியோடு வாழவும்  எங்களுக்கு துணை செய்யும். ஆமென்.