அளவில்லா நேசம்

ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.

எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.

தொடக்க நூல் 3-21, 23

நம் ஆதி பெற்றோர் கீழ்ப்படியாமல் பாவம் செய்தனர்.   ஆண்டவர் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டுப் வெளியே அனுப்பி அவர்கள் தவறை உணர வைத்தார். .  ஆனால் அவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையானதை செய்தார். எப்படியும் போகட்டும் என்று அவர்களை விட்டு விடவில்லை. தோல் ஆடைகளை செய்து அவர்களை அணிய செய்தார். நிலத்தை பண்படுத்தி வாழ வழி செய்தார் . மகப்பேற்றை கொடுத்தார். அவர்களையும் ஆசீர்வதித்தார். 

ஆண்டவர் நம் பாவங்களை நமக்கு உணர்த்துவார். பின்னர் நம்மை மன்னித்து  ஆசீர்வதிக்கும் கடவுள். நமக்கு வாழ வழி அமைத்து கொடுக்கும் அன்பு தந்தை. அளவில்லா நேசம் காட்டும் இறைவன்.

 

 ஆண்டவரே எங்கள் பாவங்களை பாராது, எங்கள் மீறுதல்களை மன்னிக்கிற இறைவா உமக்கு நன்றி.  எங்களையும் எங்கள் உறவுகளையும்,  உலக மக்களையும் கொடிய வைரஸின் அச்சத்திலிருந்து காத்தருளும் .  நாங்கள் மீண்டும் ஆலய வழிபாடுகளில் பங்கேற்று உம்மை உணவாக பெரும் பாக்கியத்தை எங்களுக்கு தாரும். ஆமென்.