உலகளாவிய மறுசுழற்சி தினம் | Global Recycling Day | March 18


உலகளாவிய மறுசுழற்சி தினம்
        உலக மறுசுழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதிப்புமிக்க முதன்மை வளங்களைப் பாதுகாப்பதில் மறுசுழற்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. மறுசூழற்சி முறையை அங்கீகரிப்பதும் அதனை செயல்படுத்த உதவுவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
        மறுசுழற்சி நீரோட்டத்தில் மாசுபடுவதைக் குறைப்பதற்கான மற்றொரு நல்ல வழி. உணவு மீதத்தை (ஸ்கிராப்) போன்ற கரிம பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாது. அவை பெரும்பாலும் மறுசுழற்சி நீரோட்டத்தை மாசுபடுத்துகின்றன. எனவே அவற்றை மறுசுழற்சி வசதிகளில் வரிசைப்படுத்தப்பட வேண்டும். இதை நம் வீட்டிலோ அல்லது உரம் தயாரிக்கும் அமைப்பாகவோ வைத்து உரம் தயாரிக்கத் தொடங்கலாம். உணவு ஸ்கிராப்புகள் முறையாக பயன்படுத்தி, உரமாக மாற்றி, மண்ணை வளப்படுத்தும் ஊக்கியாகவும் மாற்றலாம். 
        பொதுவான இடங்களில் பிரித்துவைக்கப்பட்டுள்ளவாறு நம்முடைய தேவையில்லாத பொருட்களையும், குப்பைகளையும் பிரித்துபோடுவதன் வழியாக அதனதன் தன்மைக்கேற்ப அவற்றை உரமாகவும், தேவையுள்ள பொருள்களாகவும் மாற்றலாம். ஆக மறுசுழற்சி வழியாக வாழ்வையும், இயற்கையும் மேம்படுத்தலாம்.

 

Add new comment

11 + 4 =