சர்வதேச மனச்சான்று தினம் | April 5
சர்வதேச மனசான்று தினம் என்பது மனித மனசான்றின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 5 அன்று கொண்டாடப்படும் உலகளாவிய விழிப்புணர்வு தினமாகும்.
உலக அமைதி மற்றும் அன்பின் கூட்டமைப்பு பிப்ரவரி 5, 2019 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச மனசான்று தினத்தை அறிவிக்க உலகளாவிய பிரச்சாரத்தை தொடங்கியது. இது 185 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு, 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் ஐ.நா. பொதுச்சபை பஹ்ரைன் அரசு சமர்ப்பித்த 'அன்பு மற்றும் மனசாட்சியுடன் அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்ற வரைவு தீர்மானத்தை ஜூலை 25, 2019 அன்று ஏற்றுக்கொண்டது. பின்னர் ஏப்ரல் 5, 2020 முதல் சர்வதேச மனசான்று தினம் கொண்டாட வலியுறுத்தியது.
இந்த நாள் மனசான்றின் முக்கியத்துவத்தையும், வாய் வழியாகவோ, உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதில் மனசான்றின் பங்கை எடுத்துக்காட்டுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
சில சூழ்நிலைகளில் சிறந்த முறையில் செயல்பட மக்களின் மனசான்று உதவுகிறது. அது சமூகத்தில் சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது. மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் இந்த நாளில் அறிஞர்களால் வரையறுக்கப்படுகின்றன, அவை கண்டிக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வெறுக்கிறார்கள், அத்தகைய செயல்களைத் தவிர்க்கிறார்கள்.