இணைந்த பயணம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.11.2024

என்றும் இணைந்த பயணத்தில்

 புரிந்து கொள்ளும் ஆற்றலும், விழிப்புணர்ச்சியும் தான் ஒரு மனிதனை மனிதனாக மாற்றும்.

ஏனோதானோ என்று வாழ்வதில் அர்த்தம் இல்லை.

வேண்டாதவைகளை எதிர்த்து போரிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
தமக்கு எது வேண்டாம் என்று தெரிகிறதோ அது அது மற்றவருக்கு தேவைப் படுகிறது.
இந்தப் போராட்டம் தீர்ந்தபாடில்லை.

எல்லா நிலைகளிலும் இதே வேற்றுமை உணர்வு தான் தலை தூக்கி நிற்கிறது.
இயற்கையில் நமக்கு வேண்டியதெல்லாம் இருக்கிறது.
அதை பெறுவதற்கு எடுக்கும் முயற்சியில் தான் வேறுபாடு.

அணுகுமுறை தவறிப் போவதால் கிடைக்க இருப்பதும் கிடைக்காமல் போகிறது.

புரட்சி என்ற பெயரில் போராட்டங்களை சந்திக்க நேரிடுகிறது.
புரட்சியால் ஏற்படும் விளைவு பகை உணர்வும், வறட்டு கௌரவமும் தான்.

உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு அன்பின் பரிமாற்றங்கள் அதிகரிக்க வேண்டும்.

அன்பு ஒரு குற்றமும் செய்யாது.
அன்பில்லாமை தான் குற்றங்கள் செய்யும்.

நிகழ்காலத்தில் எப்போதும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் வாழப் பழகிக் கொண்டால்,
இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கு வழி பிறக்கும்.

இயற்கை இயல்பானது.

வாழ்க்கை என்பது இயற்கையின் கொடை.
அது நிகழ்காலத்தில் இருக்கும்போது வாழ்வு என்றும் இளமையாக இருக்கும்.

இதை புரந்து கொண்டு வாழும்போது வாழ்வில் இளமைத் துள்ளல் எப்போதும் இருக்கும்.

தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ,
தனக்கு பிடித்தவருக்கு பிடித்ததை ஏற்றுக் கொள்ளும் நட்பு இருந்தால் உறவுகளுக்குள் எப்போதும் விரிசல்கள் வராது.

பிரிவதற்காக நாம் பிறக்கவில்லை
இணைந்திருக்கிறோம் 
என்பதை உணர்வதற்கே இப்பிறப்பு

பிறப்பின் மகத்துவத்தை உணர்ந்து,
 மாண்புடனே பயணிப்போம்
வாழ்வு என்னும் அற்புத பயணத்தை

 என்றும் இணைந்த பயணத்தில்

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எல்லாருக்கும் எல்லா நற்சிந்தனைகளும் நற்பண்புகளும் சகிப்புத்தன்மையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா. 

மரியே வாழ்க


சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி