குருதியொடு கண்ணீர் கொட்டியது மண்ணில் வெறிகொண்ட வெள்ளை ஆடியது வேட்டை !

குருதியொடு கண்ணீர்
கொட்டியது மண்ணில்
வெறிகொண்ட வெள்ளை
ஆடியது வேட்டை !
பறிகொடுத்தார் உயிரை
பாரதத்தை மீட்க
நெறிநின்றார் மக்கள்
நெடுவெளிச்சம் கண்டார் !
தாய்மண்ணை மீட்க
தாம்கண்ட கஷ்டம்
வாழ்வெல்லாம் மக்கள்
மனவுறுதி ஆச்சு !
யாரெதிர்த்து வரினும்
போரெழுந்து வரினும்
வீரமுடன் எதிர்த்து
விரட்டிடுவார் மக்கள் !
சுதந்திரத்தின் விடியல்
குடியரசாய் விரிந்து
மக்களது ஆட்சி
மலர்ந்ததுவே சிறப்பாய் !
பாரதத்தாய் உலகில்
வீரியத்தின் வடிவம்
பண்பாடி நாங்கள்
கொண்டாடி மகிழ்வோம் !
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
Daily Program
