உயிர்பெற்று எழ!

மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது.

மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.

1 கொரிந்தியர் 15-43,44

 

 

ஆண்டவரே மரணத்துக்கு பிறகு ஒரு வாழ்வு உண்டு என்று நம்பும் நாங்கள் நல்ல விதையாக விதைக்கப்பட்டு உம்மோடு கூட உம் வருகையில் எடுத்துக்கொள்ள பட தகுதியான வாழ்வு வாழ துணை செய்யும் கொரானாவினால் இறந்தவர்கள், யாரும் நினையாது இருக்கிறவர்கள், எங்களோடு வாழ்ந்து எங்களை விட்டு சென்ற எல்லா ஆத்துமாகளும் அமைதியில் இளைப்பாறி நிலை வாழ்வு அடைய செய்தருளும். ஆமென்.