துணிச்சலுடன் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண்ணாக மரியாவை எடுத்துக்காட்டிய அருட்சகோதரி பாட்ரிசியா, புதிதாகப் பயிற்சி பெற்ற பெண்கள் தலைவர்கள் தங்கள் சமூகங்களில் “ஒளியின் கலங்கரை விளக்கங்களாக” திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
ஜே. கிளெமென்ட், வயது 54 வயதுடைய நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர், இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருளர் சமூகம் மற்றும் வறியவர்களுக்காக 38 இலவச வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம் ஜூலை 23 அன்று உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி-ஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவப் பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த மனித மிருகங்களின் 26 நிமிட வைரல் வீடியோவுக்கு இந்திய கிறிஸ்தவ பெண்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர் .