உலக ஆயர் மாமன்றம் பிரதிபலிக்கும் ஒற்றுமை என்னும் ஒளிக்கீற்று || வேரித்தாஸ் செய்திகள்

கடந்த அக்டோபர் 9 திங்கள்கிழமையன்று நடைபெற்ற உலக ஆயர் பேரவையின் 16 ஆவது உலக ஆயர் மாமன்றமானது அக்டோபர் மாதம் 4 ம் தேதி  முதல் 29 ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருளானது ஒற்றுமை, பங்கெடுப்பு, மற்றும் மறைபரப்பு பணி இவற்றின் வழியாக கூட்டு ஒருங்கியத்தை உருவாக்கிட முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதில் இணைந்து பணியாற்றுதல் என்ற திருத்தந்தையின் திருமடலை நினைவு கூறும் விதமாக உலக ஆயர்மாமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்தினால்  ஜீன்-கிளாட் ஹோலெரிச் நான்காவது பொது அமர்வினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில்  ​​அந்தியோக்கியாவின் மரோனைட் கர்தினால் பெச்சாரா பூட்ரோஸ் ராய் கூறுகையில்  "உலகளாவிய நெருக்கடிகளுக்கு பதிலளிக்க இந்த கூட்டு ஒருங்கியக்க பாதை நமக்கு உதவுகிறது" என்று தனது மறையுரையில்  வலியுறுத்தினார்.

ஆயர் மாமன்ற குழுவின் நெறியாளர் ,  கர்தினால்  ஜீன்-கிளாட் ஹோலெரிச் , பகுதி  B-1 ஐ அறிமுகப்படுத்தினார், கடந்த வாரம் தொகுதி A அறிமுகம் செய்யப்பட்டு அதன் சிறப்பான சிந்தனையை  தொடர்ந்து,  "கடந்த இரண்டு காலமாக கடவுளுடைய மக்கள் ஒன்றாகப் பயணம் செய்த அனுபவத்துடன் நாம்  மீண்டும் இணைந்து உள்ளோம். வருடங்கள் ," மற்றும் "கூட்டு ஒருங்கியக்க  திருஅவையை  ஒரு விரிவான பார்வையாகக் கொண்டு இந்த ஆயர் மாமன்றம் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்று கூறினார்.

"கடவுளோடு ஒன்றிப்பு  மற்றும் அனைத்து மனிதகுலத்தின் ஒற்றுமையின் அடையாளமாகவும் கருவியாகவும் நாம் எவ்வாறு முழுமையாக இருக்க முடியும்? என்று கர்தினால் அவர்கள் ஒரு கேள்வியாக முன்வைத்து இந்த கேள்வியின் அடிப்படையில் அனைவரையும் சிந்திக்க அழைப்பு விடுத்தார்.

தூய ஆவியாரின் தூண்டுதலால் ஏவப்பட்டு நாம் அனைவரும் அவரின் வல்லமையுள்ள வார்த்தைகளுக்கு செவி சாய்த்து அவர் நமக்கு அளித்துள்ள இந்த பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.

அவரது அறிமுகத்திற்குப் பிறகு, அருள்தந்தை திமோதி ராட்க்ளிஃப் அவர்கள்   'கிணற்றின் அருகே  சமாரியன் பெண்: யோவான்  4:7-30' என்ற விவிலிய பகுதியின் சிந்தனைகளை வழங்கினார்.

இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் இறையியல் மற்றும்  கத்தோலிக்க ஆய்வுகளுக்கான மையத்தின் கத்தோலிக்க சமூக சிந்தனை மற்றும் பயிற்சியின் பேராசிரியரான டாக்டர் அன்னா ரோலண்ட்ஸ், 'உறவு: ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து' என்ற கருப்பொருளில் இறையியல் சிந்தனையை  பகிர்ந்துகொண்டார்..

கத்தோலிக்க திருஅவைக்கும்  ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும்  இடையிலான இறையியல் உரையாடலுக்கான கூட்டு சர்வதேச ஆணையத்தின் இணைத் தலைவரான பிசிடியாவின் மெட்ரோபொலிட்டன் ஜாப் (கெட்சா) ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் கூட்டு ஒருங்கியக்க   அனுபவத்தை வெளிப்படுத்தினர்..

மலேசியாவின் அருள்தந்தை  கிளாரன்ஸ் டேவேதாசனும்  'கடவுளோடு ஒன்றிப்பு  மற்றும் அனைத்து மனிதகுலத்தின் ஒற்றுமைக்கான அடையாளமாகவும் கருவியாகவும் நாம் எப்படி முழுமையாக இருக்க முடியும்?' என்ற கேள்வியின் கீழ் தனது சிந்தனையை பகிர்ந்துகொண்டார்.

ஹாங்காங்   நாட்டை சேர்ந்த ஒரு சாதாரண கத்தோலிக்கரான சியு வை வனேசா செங், கூட்டு ஒருங்கியக்கம்  மற்றும் கலாச்சாரம்'  குறிப்பாக, 'ஆயர் மாமன்றம்  மற்றும் ஆசிய கலாச்சாரங்கள்' என்ற தலைப்பில் தனது பகிர்வை  வழங்கினார்.

-அருள்பணி ஜான்சன் வின்சென்ட் SdC

https://www.rvasia.org/vatican-news/synod-bishops-reflects-communion-radiates