புறப்படு இளைஞனே | ஞா சிங்கராயர் சாமி | VeritasTamil

வேண்டும் வேண்டும் உண்மை வேண்டும்.
வேண்டும் வேண்டும் நேர்மை வேண்டும்.
எங்கும் எதிலும் நல்லெண்ணம் வேண்டும்.
எதனையும் எதிர்க்க மனஉறுதி வேண்டும்.

நியாயமான ஞானம் நம்மில் பெற்றிட வேண்டும் வேண்டும்.
நிலையான செயல் மண்ணில் செய்திட வேண்டும் வேண்டும்.
புறப்படு புறப்படு இளைஞனே இளைஞனே.
செயல்படு இன்றே இளைஞனே இளைஞனே.

அநீதி அநியாயம் தொலைக்க வேண்டும்,
நீதி நியாயம் நிலைக்க வேண்டும்.
கல்வி கல்லார்கும் கிடைக்க வேண்டும்
கல்லாமை இல்லாமை ஆக்கிட வேண்டும்.

கொலையும் கொள்ளையும் அழிந்திடல் வேண்டும்,
கொள்கையும் கொடையும் இருந்திடல் வேண்டும்.
இளைஞர்கள் துணிந்து முன்வர வேண்டும்
இந்தியா பார்புகழ் படைத்திட வேண்டும். 

புறப்படு புறப்படு இளைஞனே இளைஞனே.
செயல்படு இன்றே இளைஞனே இளைஞனே.

ஒழுக்கம் எதிலும் இருந்திடல் வேண்டும்
ஓயாது உழைக்கும் எண்ணம் வேண்டும்.
விவசாயம் எங்கும் பெருகிட வேண்டும்
வீடும்நாடும் நலம் பெற வேண்டும்.

புறப்படு புறப்படு இளைஞனே இளைஞனே.
செயல்படு இன்றே இளைஞனே! இளைஞனே!!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய வருடத்தை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

வாழ்க  நம்பிக்கையுடன்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி