சமூக நல்லிணக்கம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு | Veritas Tamil

திருநெல்வேலியில் சமூக நல்லிணக்கம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக 3,000க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலியில் இணைந்தனர்.

திருநெல்வேலி, ஆகஸ்ட் 20, 2025 – தமிழ்நாடு, திருநெல்வேலி, புனித இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் 3,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள்  ஒரு அற்புதமான மனிதச் சங்கிலியை உருவாக்க கைகோர்த்தனர். இந்த நிகழ்வில் உதவி ஆட்சியர் மற்றும் துணை ஆணையர் கலந்து கொண்டனர்.

1897 ஆம் ஆண்டு அன்னை மேரி லூயிஸ் டி மீஸ்டரால் அவர்களால் நிறுவப்பட்ட மரியாவின் மாசற்ற திருஇருதய சபை சகோதரிகளால்  நடத்தப்படும் புனித இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் "போதைப்பொருட்கள் வேண்டாம்" என்ற உறுதியான செய்தியை அனுப்புவதற்கும் இந்த முயற்சியை ஏற்பாடு செய்தது.

இந்த மனிதச் சங்கிலி கல்லூரி சமூகத்தின் ஒற்றுமை மற்றும் போதை மற்றும் பிரிவினை இல்லாத சமூகத்திற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. உதவி ஆட்சியர் மற்றும் துணை ஆணையர் பங்குகொண்டது  விழிப்புணர்வு இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது.

"விழிப்புணர்வைப் பரப்புவதையும், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதையும், வாழ்க்கை, அமைதி மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு சமூகத்திற்காக உழைப்பதையும் தொடருவோம்" என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் கூறினார்.

இதயங்களும் கைகளும் ஒன்றிணையும் போது சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் மாணவர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் மற்றும் குடிமக்களின் பங்கை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.