ஒலிம்பிக் பயணம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
உள்ளத்தில் ஏழ்மை
"ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்" . 20).
"அவர் செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார்"
(2 கொரி 8:9)
உலகின் தொடக்கத்திலே வார்த்தையாக இருந்த இறைவன், கடவுளோடு இருந்தார்; கடவுளாக இருந்தார். இவ்வாறு கடவுள் தன்மையில் விளங்கிய இறைவன், அந்நிலையை விடுத்து, அடிமையின் தன்மையோடு தன்னை இணைத்து ஏழையாகப் பிறந்தார். ஏழைகளுக்கே தன்னை வெளிப்படுத்தினார். அவர்களைத் தேடிச் சென்றார், அவர்களை அன்பு செய்தார், அவர்களோடு தங்கினார். தன் உடனிருப்பையும், தரிசனத்தையும் வெளிப்படுத்தி அவர்களை விண்ணரசில் செல்வந்தராக்கினார்.
குரு ஒருவர் கடவுள் தரிசனம் பெறக் கிளம்பினார். நெடிய, கடின பயணத்தை மேற்கொண்டார்.
வழியில் ஓர் ஏழை விறகுவெட்டி பட்டுப் போன மரம் ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தார்.
குருவிடம் கேட்டார்: "குருவே! நெடுந்தொலைவுப் பயணமோ?'
"நான் கடவுளைத் தரிசிக்க சென்று கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? எனக்கும், எப்போது தரிசனம் கிடைக்கும் என்று கேட்டு வாரும்"
குரு. தலையாட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்
சிறிது தூரம் சென்றவுடன், துறவி ஒருவர் கோவிலில் செபம் செய்துகொண்டிருந்தார். குருவை விசாரித்து விட்டு அவரும் சொன்னார்.
எனக்கும், எப்போது தரிசனம் கிடைக்கும் என்று கேட்டு வாரும்"
அவரிடமும் தலையாட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் குரு.
பயணம் நிறைவடைந்தபோது.கடவுளைக் கண்டார். தரிசனம் பெற்றார்.
கிளம்பும்போது, "கடவுளே! இதுபோன்ற தரிசனம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஒரு ஏழை விறகு வெட்டியும், ஒரு துறவியும் கேட்டு விட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ள சொல்ல?"" என்று கேட்டார்.
கடவுள் சொன்னார்: “அவர்களிடம் போய், கடவுளைக் கண்டேன். அவர் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்துக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்.'
நிறையாசீர் பெற்றுத் திரும்பிய குருவைத் தடுத்து நிறுத்தினார் துறவி.
"கடவுளைக் கண்டீர்களா? தரிசனம் கிடைத்ததா?" என்று கேட்டார்.
"கிடைத்தது.. கிடைத்தது. அவர் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்துக்கொண்டிருந்தார்" என்றார்.
கேட்டதும் குபீரெனச் சிரித்துவிட்டார் துறவி "என்ன குருவே... நக்கலா?"
"ஊசியின் காதில் ஒட்டகமா? அது எப்படி முடியும்? என்ன கதை விடுகிறீரா? என்னால் நம்ப முடியாது" என்றார்.
குருவோ, பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் விறகு வெட்டியைப் பார்த்தார். அவரோ, ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்.
குருவைப் பார்த்தவுடன் அவரும் ஆர்வமுடன் கேட்டார். “என்ன குருவே! கடவுளைக் கண்டீர்களா? தரிசனம் கிடைத்ததா?"
“ஆம்.. கண்டேன். அவர் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்துக் கொண்டிருந்தார்."
கேட்டவுடன் விறகு வெட்டி சொன்னார். "அப்படியா! அவரது அருளே அருள்... வல்ல செயலே செயல்" என்று கூறிக் கண்களை மூடி மனமுருகி நின்றார்.
குரு கேட்டார், "விறகு வெட்டியே, அந்தத் துறவி இதை நம்பவில்லை. நீங்கள் இதை நம்புகிறீர்களே! சரி, நான்தான் கேட்கிறேன். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைக்க முடியுமா?"
உடனே விறகுவெட்டி, " நம்புகிறேன் குருவே . நம்புகிறேன்".
"இதோ. இந்தச் சின்னஞ்சிறிய ஆல விதையிலிருந்து இவ்வளவு ஆலமரத்தை உருவாக்கி வளர்க்கின்ற அந்தக் கடவுளால், ஊசியின் காதில் ஓட்டகத்தை நுழைக்க முடியாதா என்ன? முடியும்.. முடியும் அவரால் எல்லாம் முடியும்." என்று சொன்னதுதான் தாமதம்... கடவுள் அங்கு தோன்றினார். எழை விறகு வெட்டிக்கு ஆசீர் தந்தார்.
இவர்தான் ஏழைகளைத் தேடிவந்த இறைவன். அவரது பார்வையில் கதான் பேறுபெற்றவர்கள். அவர் சொல்லும் செய்தியும் இதுதான். உங்களோடு இருக்கும் ஏழைகளோடு கைகோர்த்து நில்லுங்கள். உள்ளத்தில் ஏழ்மை நிலையில் இருங்கள். அப்போதுதான் நான் என்றும் உங்களோடு இருப்பேன்."
பொருள் இல்லாமையால் வரும் ஏழ்மை தவிர, அருள் குன்றிய நிலை, உரிமையற்ற நிலை, உடல் நலமற்ற நிலை, சமய சுதந்திரம் மதுக்கட்டாயமாகப் பறிக்கப்படும் நிலை, சாதியப் பிரிவு, அடக்குமுறை. தீண்டாமை, தீவிரவாதம், உளநிலை சார்ந்த அடிமைத்தனம். அமைதியின்மை, அறிவு சார்ந்த பின் தங்கிய நிலை மனித ஆளுமை இழந்த நிலை, துன்புறும் நிலை இவையெல்லாம் ஏழ்மையின் வடிவங்களே .
கீறிஸ்துவின் தெளிவான உயிருள்ள சாயலாக விளங்கும் நாம் இத்தகைய ராழகளைத் தேடிச் செல்வோம். அவர்களோடு தோழமை கொள்வோம். நாமும் ஏழையாவோம். ஏனெனில் ஏழைகளுக்கே இறைவனின் தரிசனம்..
"அவன் வருகின்றான் ஏழையாக வருகின்றான். ஏழையிடம் வருகின்றான்... காலடி ஓசைக் கேட்கிறதா!"