பாதை தெரியாத துறவி .. | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

ஐந்து இளைஞர்கள் துறவிகளாக வேண்டுமென ஆசைப்பட்டனர். முனிவர் ஒருவரிடம் சென்று தங்களது விருப்பத்தைத் தொவிருந்தனர். முனிவர் அவர்களைப் துறவிகளாக பார்த்து, "நீங்கள் நல்ல திருக்கவேண்டுமென்றால், ஐந்து ஆண்டுகள் பயிற்சியின் நிமித்தம் இங்கேயே தங்கியிருந்து கற்க வேண்டும். முடிவில் உங்களது நடத்தையைப் பார்த்து துறவிகள் என்கிறப் பட்டம் கொடுக்கப்படும்" என்று கூறினார் முனிவர்.

துறவிகளுக்கான பயிற்சி உடனே தொடங்கியது. ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் முனிவர் அவர்களைப் பார்த்து, "இன்னும் முக்கியமாக ஆறுமாத களப்பயிற்சி ஒன்று இருக்கிறது. நீங்கள் ஐவரும், அருகில் உள்ள ஐந்து கிராமங்களுக்குத் தனித்தனியாகச் செல்லவேண்டும். அங்கு ஆறுமாதம் களப்பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி முடியும் போது ஒவ்வொருவரும் சந்தந்த கிராமங்களிலிருந்து ஐந்து நல்லவர்களை உங்களுடன் அழைத்து வரவேண்டும்' என்று கூறினார்.

ஐவரும் பயிற்சியைத் தொடங்கினார். கடுமையான பயிற்சி. ஓய்வு கிடையாது. சரியான உணவும் இல்லை. முனிவர் கூறியபடி நல்லவர்களைத் தேடினார்கள்.யாரும் கிடைக்கவில்லை. பயிற்சி முடிந்தது. வெறுங்கையோடு முனிவரிடம் திரும்பி வந்தனர். முனிவர் அவர்களிடம், "நீங்கள் பயிற்சிக்குச் சென்ற கிராமங்களிலிருந்து நல்லவர்களை அழைத்து வரவில்லையா?" என்று கேட்டார். "நல்லவர்களைத்தேடி அலைந்தோம். யாரும் கிடைக்கவில்லை" என்றனர்.


எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image