இன்பமயம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.01.2025

தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள்...வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்...

சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது...

ஆகையால் 

முடிந்து போன வாழ்க்கை திரும்பி வரப் போவதில்லை

ஆகவே

நிகழ்காலத்தின் சரியான பாதையில் எதிர்காலத்தை நோக்கிப் பயணியுங்கள்.

அதாவது 

மகிழ்ச்சி என்பது குறிப்பிட்ட வயதிலோ, வருமானத்திலோ வருவதில்லை. நாம் வாழும் முறையில் தான் உள்ளது.

கலங்கியக் குளத்தில், மீன் பிடிக்க இயலுமா?

துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தில் , ரயில் தனது பயணத்தைத் தொடர முடியுமா?.

குழப்பமான மனநிலையில் மனிதனால் முன்னேற முடியுமா?.

எண்ணத்தில் தெளிவு இருந்தால், எதுவும் முடியும்.

நம்பிக்கையோடு இருங்கள்
வெற்றி‌ நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எம் மக்களுக்கு நேர்மையும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி