பண ஆசை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.11.2024

வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்.

பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஆட்கொண்டு இருக்கிறார்கள்.

பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைத்து இருப்பது தான் தவறு.

அதாவது உலகில் மிகவும் உயர்ந்த மனிதனாக வாழ்ந்தாலும் தனது சொத்துக்கள் நம் முன் இருக்க, அந்த சொத்துக்களால் தனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணம் அடைய வேண்டும்.

ஆகையால் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுகிறது.

பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களோடு பழகாதீர்கள்.

பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகினால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நேர்மையும் உழைப்பும் சகிப்புத்தன்மையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி