வெற்றி நிச்சயம்.|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.06.2024

                                                                 வெற்றி நிச்சயம்...!

நேற்று நடந்ததைப் பற்றியும்,
இன்று நடப்பதைப் பற்றியும்
உங்கள் மனதில் சினிமா
போன்று பார்க்காதீர்கள்.

நீ கல்லானால் அடியைத் தாங்கு
நீ உளியானால் ஓங்கி அடி
நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு.

நாளைக்கு நீங்கள் எப்படி
உருவாகப் போகிறீர்கள் என்பதை
மட்டுமே பாருங்கள்.

கோபத்திலும் பொறுமை.
செல்வத்திலும் எளிமை.

ஏழ்மையிலும் நேர்மை.
வறுமையிலும் பரோபகாரம்.

பதவியிலும் பணிவு.
தோல்வியிலும் விடாமுயற்சி
இருந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நேர்மையும் உண்மையும் விடாமுயற்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க

 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி