காலநிலை மாற்றம் குறையும் மகரந்தசேர்க்கை - ஆபத்தில் இயற்கையும் பூமியும் ||Veritas Tamil

காலநிலை மாற்றம், நிலத்தை பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றம் காரணமாக மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல்  வெப்பமண்டல பயிர்கள் ஆபத்தில் உள்ளன என்று சமீபத்திய  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது மேலும் வெப்பமண்டல தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையம்  61% குறைந்துள்ளது என்பது நெருங்கி வரும் ஆபத்தை நம் கண்முன்னே காட்டிவருகிறது.

காபி, கோகோ, தர்பூசணி மற்றும் மாம்பழம் போன்ற வெப்பமண்டல பயிர்கள் தற்போது  பூச்சிகளால் ஏற்படும்  மகரந்தச் சேர்க்கைகளை இழந்து செயற்கையான முறையில் மகரந்தசேர்க்கை நடத்தி மனித குலமும் இயற்கையும் ஒரு மிகப்பெரிய   நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று  லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

 மாறிவரும் அல்லது மாற்றப்பட்ட காலநிலை மற்றும் நிலங்களை பயன்படுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்  முக்கிய வெப்பமண்டல பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது, 

இந்த அழிவை தூண்டும் முக்கிய காரணிகள் வாழ்விட  அழிவு, முறையற்ற நிலப் பயன்பாடு, மேய்ச்சல் நிலங்களின் அழிவு , உரங்கள் மற்றும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துப் பயன்பாடு ஆகியவற்றுடன் விவசாயத்தில் ஒரே பயிரை செயற்கை முறையில் அதிக முறை பயிர் செய்வது போன்ற காரணிகளை அடுக்கியுள்ளது.

இந்த ஆய்வில், 2050 வரை எந்தெந்த மகரந்தச் சேர்க்கை சார்ந்த பயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் ,மகரந்தச் சேர்க்கை சார்ந்த  பிரச்சனை வெப்பமண்டலத்தில் வளரும் பயிர் வகைகளில் அதிகமாக உள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

வெப்பமண்டலங்களில் வளரும் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை 61 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மகரந்தச் சேர்க்கை இல்லாத காரணத்தினால்  பயிர் உற்பத்திக்கு அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக சஹாரா- ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் இதன் விளைவு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஆபத்தில் இருக்கக்கூடிய மொத்த உற்பத்தியின் அடிப்படையில், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் வெப்பமண்டல பயிர்களில், கோகோ அதிக ஆபத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டது, பெரிய அளவு, குறிப்பாக ஆப்பிரிக்காவில், அதைத் தொடர்ந்து குறிப்பாக இந்தியாவில் மாம்பழம், , மற்றும் சீனாவில் தர்பூசணி போன்ற பழ வகைகள் ஆபத்தில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மகரந்தச் சேர்க்கை இல்லை என்றால்  மிக அதிகளவில் விளையக்கூடிய பயிர்கள், பழங்கள்  மற்றும் தாவரங்கள்  மூலமாக ஏற்படும் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி  உலகளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பல கோடிக்கணக்கான  விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமான பாதுகாப்பின்மையை அதிகரிக்க மிக அதிக வாய்ப்புள்ளது.

அமெரிக்க  வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, உலகின் பூக்கும் தாவரங்களில் நான்கில் மூன்று பங்கு மற்றும் உலகின் 35 சதவீத உணவுப் பயிர்கள் இனப்பெருக்கம் செய்ய விலங்கு மற்றும் பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கைகளைச் சார்ந்துள்ளது .

மகரந்தச் சேர்க்கையாளர்கள் தங்கள் உணவைத் தேடி (தேன் மற்றும் மகரந்தம்) பூக்களை தேடி செல்கின்றன . ஒரு பூவுக்கு தேனீயின் வருகையின் போது, ​ மகரந்தச் சேர்க்கை தற்செயலாக மலரின் இனப்பெருக்க பாகங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அந்த தேனீ  அறியாமல் பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு மகரந்தத்தை கடத்தி இயற்கையை தொடர்ச்சியாக காது வருபவை இத்தகைய பூச்சிகளும் விலங்குகளும் மட்டுமே என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. வைப்பது.  ஒரு பழம் அல்லது விதை உருவாக மகரந்தசேர்க்கை என்பது இந்த இயற்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று.   

காலநிலை மாற்றத்தைத் தணிக்க உலகளாவிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை ஆய்வு முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் நிலத்தின் பயன்பாடுகளை முறைப்படுத்தும்  முயற்சிகள் மற்றும் பூச்சி மகரந்தச் சேர்க்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. 

இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.


-அருள்பணி வி.ஜான்சன் SdC
(Source from Down To Earth )