உலக சுற்றுச்சூழல் தினம் || Veritas Tamil

1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது . அடுத்த ஆண்டுகளில், காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் மாசுபாடு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், நிலையான நுகர்வு, கடல் மட்ட அதிகரிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற நமது சுற்றுச்சூழல் மற்றும் இந்த பூமி  எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாக  உலக சுற்றுச்சூழல் தினம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நுகர்வு முறைகளிலும் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.

2023 மையக்கருத்து  : பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்
#BeatPlasticPollution என்ற ஹேஷ்டேக் மற்றும் முழக்கத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகளில் கவனம் செலுத்தும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது. அதனால் இந்த வருட மையக்கருத்தாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிப்பது என்று உலக நாடுகள் முடிவு எடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றன. 

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 430 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக்  உற்பத்தி செய்யப்படுகிறது, அதில் பாதி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 19-23 மில்லியன் டன்கள் ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல்களில் குப்பைகளாக சேர்ந்து நீர்வளத்தையும் பாழாக்கி நீரில் வாழும் உயிர் வாழ் உயிரினங்களையும் அழித்து வருகிறது.. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் - 5 மிமீ விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துகள்கள் - உணவு, நீர் மற்றும் காற்றுக்குள் நுழைகின்றன. பூமியில்  வாழும் உள்ள ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு 50,000 பிளாஸ்டிக் துகள்களுக்கு மேல் உட்கொள்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது - மேலும் சுவாசிக்கும்போது உள்ளிழுக்கும் பிளாஸ்டிக் துகள்களை கருத்தில் கொண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் இதன் அளவு இன்னும் அதிகமாகும் என்பது அதிர்ச்சியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. தூக்கி எறியப்படும்  அல்லது எரிக்கப்படும்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மனித ஆரோக்கியத்திற்கும் பல்லுயிரியலுக்கும் தீங்கு விளைவிக்கிறது மற்றும் மலை உச்சியில் இருந்து கடல் தளம் வரை உள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பையும் மாசுபடுத்துகிறது.

சிக்கலைச் சமாளிப்பதற்கான விஞ்ஞானம் மற்றும் தீர்வுகளுடன், அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உருமாறும் நடவடிக்கைகளைத் திரட்டுவதில் இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், கடல் சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சட்டப்பூர்வக் கருவியை உருவாக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையில் 2022 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் மாநாடு கடந்த  மே 2023 இன் இறுதியில் பாரிஸில் நடைபெறும். பிளாஸ்டிக்கின் முழு வாழ்க்கைச் சுழற்சியைக் குறிக்கும் ஒரு விரிவான அணுகுமுறையின் அடிப்படையில் இந்த கருவி உருவாக்கப்பட உள்ளது எனபது கூடுதல் தகவல் என்பதை விட சற்று ஆறுதலான தகவல் ஆகும்.

 

-அருள்பணி வி. ஜான்சன் 

(Geneva Environment Network)