இயற்கை இசையமைக்கும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.04.2025

மரத்தின்
இலைகளாக இருக்க
ஆசை படாதே.
உதிர்ந்து விடுவாய்.
வேர்களாக இருக்க
ஆசைபடு.
வளர்ந்து கொண்டே
ஊடுறுவுவாய்.
அசையாமல் இருக்கும்
மலையாய் இருப்பதை விட
ஆர்ப்பரிக்கும் அருவியாய்
இருக்க ஆசை படு.
""வீழ்ந்தாலும் ஆறாக ஓடுவாய்."
தோல்வி என்பது
உன் லட்சியத்தின் முடிவல்ல.
கடிகார முள்ளைப் போல்
ஓய்வில்லாமல்
முயற்சி செய்து.
சோதனைகளுக்கு
இடையே வரும்.
வேதனைகளை தாங்கி
சாதனைகள் பல செய்
காற்றும் உனக்கு வழிவிடும்.
கடல் அலைகள் வாழ்த்து கூறும்.
இயற்கை உனக்கு
இசையமைக்கும்.
குயில்கள் உன் புகழ் பாடும்.
நாம் மாண்டு போவதற்கு
மண்ணில் தோன்றிய
மண்கற்கள் அல்ல.
எரிந்து கொண்டே
உலகை வளம் வரும்.
விண்ணில் தோன்றிய
விண்கற்கள்.
இன்று முதல்
நீ பறிக்கும் ஒவ்வொரு
சாதனைப் பூக்களும்
இயற்கையை விட
இனிமையான
எழிலோவியமாக
பிரதிபலிக்க.
வாழ்த்துகள்.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
