தன்னலம் துறப்போம், நம் சிலுவைதனை சுமப்போம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

8 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 18 ஆம் வாரம் –வெள்ளி

இணைச்சட்டம்  4: 32-40
மத்தேயு 16: 24-28
 

தன்னலம் துறப்போம், நம் சிலுவைதனை சுமப்போம்!
 

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலில் இருந்து வருகிறது.  இப்போது ஏற்குகறைய நாற்பது ஆண்டுகால பாலைநிலப் பயணத்தின் இறுதியில் யார்தான் நதியின் கிழக்குப் பகுதியில் தங்கியுள்ளனர். யோர்தானை நதியைத் தாண்டினால், அவர்கள் வாக்ளிக்கப்பட்ட கானான் நாட்டில் காலடி வைத்துவிடுவார்கள். 
இப்பது, மோசே, இதுவரை கடவுள் வழங்கிய பத்துக்கட்டளைகள் உட்பட  சட்டங்களை மீண்டும் நினைவூட்டி  போதிக்கிறார். இஸ்ரயேலருக்காக ஆண்டவராகிய கடவள்  செய்ததைப் போன்று, வேறு எந்த மக்களுக்கும் செய்யப்பட்ட அற்புதமான செயல்களை அவர்கள் எப்போதாவது அறிந்திருக்கிறார்களா என்று மோசே "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடம்" கேட்கிறார். இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம், கடவுள் உண்மையிலேயே அற்புதமானவர், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவரை வழிபட வேண்டும், அன்பு செய்ய வேண்டும் என்ற விண்ணப்பங்களை மோசே இஸ்ரயேலர் முன் வைக்கிறார்.

நற்செய்தி.


 நற்செய்தியில் இயேசு, சீடத்துவ வாழ்வின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றபோது, “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே – ஆன்மாவையே – இழப்பாரெனில் அவர்க்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?” என்பதோடு, மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரவுள்ளார் என்றும்,  அந்நிகழ்வின்போது,  ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார் என்றும் உறுதிகூறுகிறார்

சிந்தனைக்கு.

 “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்று பணிக்கிறார் ஆண்டவர். ஆகவே, இயேசுவைப் உண்மையில் பின்பற்றுவதற்கு முதல் நிபந்தனை தன்னலம் துறப்பதாகும்.  தன்னலம் துறக்காவிடில் இயேசுவின் சீடத்துவத்தில் பங்கில்லை என்பது உறுதியாகிறது. 

தன்னை மறுப்பதில்   அல்லது துறப்பதில்தான்,  ஒருவர் மற்றொருவருக்கு (சீடருக்கு) சொந்தமானவர் என்ற ஞானம் பிறக்கும்.  இந்தப் பகுதி சீடத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த அழைப்பு. இயேசுவைப்   பின்பற்றுவது ஆறுதல் அல்லது உலக இனபம் பற்றியது அல்ல - அது  எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அரசை முன்னுரிமைப்படுத்துவதாகும்.

"தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்  மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்." (மத் 16:25) என்பதில் அன்பும் இரக்கமும் நம்மை தியாகத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்.   ஆனால் எல்லா தியாகங்களும் அன்பை உண்டாக்குவதில்லை. ஏனெனில் கடவுள் தியாகம் அன்பு கலந்து தியாகம். கடவுள் அன்பாயிருக்கிறார். அன்பு நிறைந்த தியாகமே நம்மை காத்துநிற்கும். இத்தகைய அன்பு கலந்து தியாகமே நமக்கான அழைப்பு. ஆகவே, தன்னலம் துறப்பது மட்டுமல்ல, நமது சிலுவையான துன்பத் துயரங்களை நாமே சுமக்க வேண்டும். அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதல்ல.

பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமமாக! (கலா 5:21-22).

இறைவேண்டல்.

தன்னலம் துறந்து, என் சிலுவையைத் தூக்கிக்கொண்டு உம்மைப் பின்பற்ற பணித்த ஆண்டவரே. உம்மில் நான் வாழ்வுபெற என்னை திடப்படுத்துவீராக. ஆமென்

 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452