instagram

  • இறையன்பு

    Nov 05, 2020
    நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.

    1 யோவான் 3:1​
  • வலுப்படுத்துதல்

    Nov 05, 2020
    எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.
    1 திமொத்தேயு 1:12
  • அன்புக்கு ஈடாக

    Nov 03, 2020
    எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
    என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.
    நீதிமொழிகள் 8:17,18
  • உயிர்பெற்று எழ!

    Nov 01, 2020
    மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது.

    மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.

    1 கொரிந்தியர் 15-43,44
  • புனிதர்களின் பாதையில்..

    Nov 01, 2020
    மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.

    2 அரசர்கள் 13-20.
  • நமது மன்றாட்டு யாருக்கு?

    Oct 29, 2020
    ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.

    தொடக்க நூல் 25-21
  • விசுவாசம்

    Oct 28, 2020
    இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

    மத்தேயு 15-28.
  • இது சாதாரண புதுமையா?

    Oct 27, 2020
    நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.

    யோவான் 11-42.
  • வலிமையோடு இருக்க

    Oct 26, 2020
    அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார்.

    வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

    லூக்கா 6-48.
  • உண்மையான இயல்பு என்ன?

    Oct 26, 2020
    மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

    யோவான் 1-29
  • அமைதியோடு அவர் பாதத்தில்

    Oct 25, 2020
    எலியா போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.⒫

    1 அரசர்கள் 19-13
  • கேட்கப் பழகுவோமா?

    Oct 20, 2020
    ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் “எனக்கு இப்படி நடப்பது ஏன்?” என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.

    தொடக்க நூல் 25-22
  • கேள்விகளும் பதில்களும்

    Oct 19, 2020
    கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

    2 கொரிந்தியர் 1-4
  • செல்லும் பாதைகள்

    Oct 17, 2020
    இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.

    சபை உரையாளர் 1-14.
  • சொல்லின் வலிமை

    Oct 16, 2020
    யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் ‘நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்’ என்று சொல்லி அவருக்கு ‘யாபேசு’ என்று பெயரிட்டார்.⒫

    1 குறிப்பேடு 4-9.