கோடை விடுமுறை என்றால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் தற்போது வருடா வருடம் அந்தக் கோடையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே போவதும் விளைவுகளை மோசமாக்குகிறது. அவ்வளவு ஏன், அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது