தாயன்புக்கு ஈடு இல்லை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

தாயன்புக்கு ஈடு இணையில்லை அதற்கு வேற்றுமை பாராட்டவும் தெரிவதில்லை.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் நாள் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக ஒரு பெண் மத்திய சீனாவிலிருக்கும் ஷான்ஜி, ஜிங்காங் இண்டர்மீடியேட் மக்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்காக நீதிமன்றத்துக்குள் செல்வதற்குமுன் அப்பெண், பிறந்து நான்கே மாதங்களான தன் கைக்குழந்தையை அருகிலிருந்த பெண் காவலாளியான லினா ஹயோ அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

விசாரணை நடந்து கொண்டிருந்தது. உள்ளே சென்ற அந்தப் பெண்ணால் வெளியே வரமுடியாத சூழ்நிலை. திடீரென்று பெண் காவலாளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கைக்குழந்தை பசியால் 'ஓ' என்று அழ ஆரம்பித்துவிட்டது. வெளியில் நின்ற பலராலும் குழந்தையின் அழுகையை நிறுத்தப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எவரது முயற்சியும் பலன்கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்த லினா ஐயோ நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணிடம் சென்று, "அழுதுகொண்டிருக்கின்ற இந்தக் குழந்தைக்கு தானே பாலூட்டலாமா?" என்று அனுமதி கேட்டார். அந்தத் தாயும் பன்முறுவலோடு அனுமதி கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் குழந்தையும் தமது அழுகையை நிறுத்தியது.

குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்தப் பெண் வெளியே வந்து, அந்தக் ஏபல் அதிகாரிக்கு வாய்விட்டு நன்றி சொல்ல முடியாத அளவுக்குக் கண்கலங்கி நின்றார். செய்தியாளர்கள் லினோவிடம் இதுபற்றிக் கட்டதற்கு, “நானும் அண்மையில் தாயானேன். எனவே அந்தக் மந்தையின் பசியை என்னால் ஆற்ற முடிந்தது” என்று சொன்னார்.

குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கும் தாயைவிட, அதிக அழகான காட்சி இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியுமோ?

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.