பிரிக்க முடியாதவை | அருட்சகோதரி செலஸ்டி சலேஸ் SSAM | Veritas Tamil
பிரிக்க முடியாதவை
கல்வி பண்படுத்தும் - கலாச்சாரம் பக்குவப்படுத்தும்
கல்வி கண்களை திறக்கும் - கலாச்சாரம் பண்புகளை வளர்க்கும்
கல்வி வாழ்விக்கும் துறை - கலாச்சாரம் வாழ்க்கை முறை
கல்வி காட்டும் நம் தடத்தை - கலாச்சாரம் காட்டும் நம் நடத்தை
கல்வி என்பது விளக்கம் - கலாச்சாரம் என்பது வழக்கம்
கல்வி பன்மையானது - கலாச்சாரம் தொன்மையானது
கல்வி மனம் சார்ந்தது - கலாச்சாரம் இனம் சார்ந்தது
கல்வி நல் வரவு - கலாச்சாரம் நம் மரபு
கல்வி நமது தன்னம்பிக்கை - கலாச்சாரம் நமது நம்பிக்கை
கல்வி நம் ஆதாயம் - கலாச்சாரம் நம் ஆதாரம்
கல்வி தரும் பணிவு - கலாச்சாரம் தரும் துணிவு
கல்வி வாழ்வின் வழி - கலாச்சாரம் மொழியின் விழி
கல்வி பெற்றுத்தரும் அழகிய நிலை - கலாச்சாரம் கற்றுத்தரும் அழகிய கலை
கல்வி பொருள் தரும் - கலாச்சாரம் அருள் தரும்
கல்வி கனவோடு தொடர்புடையது - கலாச்சாரம் உணர்வோடு தொடர்புடையது
கல்வி அறிவைப் பெருக்கும் - கலாச்சாரம் உறவைப் பெருக்கும்
கல்வி நம் கட்டுப்பாடு - கலாச்சாரம் நம் பண்பாடு
கல்வி வளர்க்கும் கண்ணியம் - கலாச்சாரம் வளர்க்கும் புண்ணியம்
கல்வி என்பது மனிதம் - கலாச்சாரம் என்பது புனிதம்
ஆக இவை இரண்டும் உடலும் உயிரும், நிலமும் நீரும், நகமும் சதையும்
பூவும் நாரும் போன்று இணைந்துள்ளது.
கலாச்சாரத்தில் உள்ள நல்லதைச் சாரமாக்கி
கல்விக் கட்டடத்தைக் கட்டினால்...பிரியாமல் வாழ்ந்திடுவோம் வாழவைத்திடுவோம்.
எழுத்து
அருட்சகோதரி செலஸ்டி சலேஸ் SSAM, மீஞ்சூர்